ரசிகரின் பதிவை கண்டு கவிதை மூலம் பாராட்டி பதிவிட்ட விக்ரமின் ட்விட்டர் பதிவு வைரலாகி வருகிறது.

கோலிவுட் திரை உலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் விக்ரம். இவரது நடிப்பில் அண்மையில் வெளியான கோப்ரா மற்றும் பொன்னியின் செல்வன் திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. அதனைத் தொடர்ந்து இவர் தற்போது பா.ரஞ்சித் இயக்கத்தில் உருவாகி வரும் தங்கலான் திரைப்படத்தில் நடித்து வருகிறார். மேலும் இவரது நடிப்பில் பொன்னியன் செல்வன் திரைப்படத்தின் இரண்டாம் பாகமும் வரும் ஏப்ரல் மாதத்தில் வெளியாக இருப்பதாக படகுழு அதிகாரபூர்வமான அறிவிப்பை அண்மையில் தெரிவித்து ரசிகர்களை உற்சாகப்படுத்தியது.

ரசிகரின் அற்புதமான செயலை… கவிதை மூலம் பாராட்டி ரீ-ட்வீட் செய்த விக்ரம்.!

இந்நிலையில் நடிகர் விக்ரம் அவரது ட்விட்டர் பக்கத்தில் ரசிகர் ஒருவரை கவிதை மூலம் பாராட்டி வெளியிட்டு இருக்கும் பதிவு வைரலாகி வருகிறது. அதாவது தங்கலான் திரைப்படத்தில் விக்ரமின் கதாபாத்திரத்தை விரல்களால் அற்புதமாக காண்பித்து பதிவிட்டிருக்கும் ரசிகரின் புகைப்படத்தை கண்டு ஆச்சரியப்பட்ட விக்ரம், “உன் விரல் நுனியில் கூட கலை விளையாடுதே தமிழ், நன்றி என அந்த ரசிகரின் பெயரை குறிப்பிட்டு கவிதை மூலம் அவரது பதிவிற்கு ரீட்வீட் செய்திருக்கிறார். அது தற்போது வைரலாகி வருகிறது.