Actor Vijay's son Jason Sanjay becoming director?

தனது தந்தையிடம் கால்சீட் கேட்டுள்ளார் தளபதி விஜயின் மகன் சஞ்சய்.

Actor Vijay’s son Jason Sanjay becoming director? : தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் தளபதி 65 திரைப்படம் வெளியாக உள்ளது.

நெல்சன் திலீப்குமார் இயக்கத்திலும் சன் பிக்சர்ஸ் தயாரிப்பிலும் உருவாக உள்ள இந்த திரைப்படத்தில் தளபதி விஜய் நடிக்கவுள்ளார். இவருக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இப்படியான நிலையில் தற்போது தளபதி 66 படத்தை எந்த இயக்குனர் இயக்குவார் என்ற பரபரப்பு தற்போது இருந்து வருகிறது.

தற்போது விஜய் மகன் சஞ்சய் தன் அப்பாவை வைத்து ஒரு திரைப்படம் இயக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த திரைப்படத்திற்கு அப்பாவிடம் கால்ஷீட் கேட்டுள்ளாராம் சஞ்சய்.

இதனால் தளபதி சிக்ஸ்டி சிக்ஸ் இயக்குனர் சஞ்சயா? என்றும் கேள்வி எழுப்பப்பட்டு வருகிறது.

இது தளபதி ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தி வருகிறது.