ஒரு ஏரியை தூர் வாருவது தொடர்பாக அங்கே உதயநிதி சென்றிருந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Actor udhyanithi stalin photo goes viral – தமிழகத்தில் உள்ள ஏரிகளை சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் ஒருபக்கம் தூர் வாறும் முயற்சியில் ஈடுபட்டிருந்தனர்.

மறுபக்கம் எதிர்கட்சியான திமுக தரப்பிலும் அதற்கான முயற்சிகள் நடந்து வருகிறது. அதில் சில இடங்களை திமுக தலைவர் ஸ்டாலின் நேரில் சென்று ஆய்வு செய்து வருகிறார்.

மேலும், தற்போது இளைஞர் அணி செயலாளர் பதவிக்கு வந்துள்ள நடிகரும், ஸ்டாலின் மகனுமான உதயநிதியும் அப்பணிகளை பார்வையிட்டு வருகிறார்.

வலைதளத்தில் வைரலாகும் சூர்யாவின் லேட்டஸ்ட் புகைப்படம் .!

அப்படி தூர்வாறுவது தொடர்பாக ஒரு ஏரியை அவர் பார்வையிட சென்றிருந்த போது, அங்கே திமுக கொடி வைக்கப்பட்டிருந்ததோடு மட்டுமில்லாமல், அவர் நடந்து வர சிவப்பு கம்பளமும் விரிக்கப்பட்டிருந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.

இதனைக்கண்ட நெட்டிசன்கள் ஏரியை தூர் வார எதுக்குடா சிவப்பு கம்பளம்.. ? உலகத்துலையே கம்மாய்ல சிவப்பு கம்பளம் விரித்த கரகாட்ட கோஷ்ட்டி உபீஸ் கோஷ்ட்டிதான் என திமுகவினரை கிண்டலடித்து வருகின்றனர்.