நடிகர் சூர்யா எடுத்த அதிரடி முடிவு: ரசிகர்கள் வரவேற்பு..
நடிகர் சூர்யா தற்போது எடுத்துள்ள முடிவுக்கு, ரசிகர்கள் மகிழ்ச்சியுடன் லைக் செய்து பெருகுவது வைரலாகி வருகிறது. அது குறித்த தகவல் பார்ப்போம்..
உலக அளவில் கங்குவா படம் இன்று ரிலீசாகியுள்ளது. முன்னதாக நடிகர் சூர்யா கூறும்போது, ‘வயதிற்கு தக்க இனிமேல் ரொமான்ஸ் படங்களில் தான் நடிக்க போவதில்லை’ என்று தெரிவித்துள்ளார்.
இனிமேல் முழுக்க முழுக்க ஆக்சன் படங்களில் மட்டுமே, தான் நடிக்க திட்டமிட்டு உள்ளதாகவும், ரொமான்ஸ் படங்களுக்கு லேட் ஆகிவிட்டதாகவும்’ தெரிவித்துள்ளார்.
சூர்யா என்றால், அவரது ரொமான்ஸ் படங்கள் ரசிகர்கள் மத்தியில் நினைவுக்கு வரும். இந்த நிலையில், சூர்யா எடுத்துள்ள ஆக்சன் அவதாரம் கவனத்துக்கு உள்ளாக்கி இருக்கிறது. மேலும், இதனால், கார்த்தி உள்பட பிற நடிகர்களுக்கு ரொமான்ஸ் பட கதைகள் போய்ச் சேர வழி வகுக்கும்.
இன்று வெளியான கங்குவா படம், வரலாற்று படமாக உருவாகியுள்ளது. இந்த படத்தில் பிரான்சிஸ் மற்றும் கங்குவன் என இருவேறு கெட்டப்புகளில் சிறப்பான நடிப்பை கொடுத்துள்ளார் சூர்யா.
கங்குவா படம் தற்போது சிறப்பான விமர்சனங்களை பெற்று வருகிறது. படத்தில் சூர்யாவின் கொலமாஸான ஆக்சன் வேற லெவலில் தெறிக்கிறது. இதனால் அவர் தற்போது எடுத்துள்ள ஆக்சன் முடிவுக்கு ரசிகர்கள் வரவேற்பு தெரிவித்து வருகிறார்கள்.