‘கங்குவா’ படத்தின் இரண்டாம் பாகம் எப்போது வரும்?: இயக்குனர் சிவா பதில்
வியக்க வைக்கும் பிரம்மாண்டம், விறுவிறுக்கும் விஷீவல் எபெக்ட்ஸ், வேற லைவல் மேக்கிங் ஸ்டைல், மிரட்டலான பீரியட் காட்சிகள், இவைகளுடன் அசத்தும் ஒளிப்பதிவும், அதிரடி இசையும், அட்டகாசமாய் இயக்கம், அசாத்திய ஹீரோயிசம் என எட்டுத்திசையும் தெறித்து ஓட பற பறவென பறந்து கொண்டிருக்கிறது கங்குவா.
ஆம்.., சூர்யா, திஷா பதானி, பாபி தியோல் உள்ளிட்டோரை வைத்து சிறுத்தை சிவா இயக்கிய கங்குவா படம் இன்று ரிலீஸ் ஆகியிருக்கிறது. படத்திற்கு கலவையான விமர்சனம் வந்து கொண்டிருந்தாலும், தவறாது பார்க்க வேண்டிய பிரம்மாண்டமான படைப்பு.
படம் பார்க்கும் அனைவரும் சூர்யாவின் நடிப்பை பாராட்டிக் கொண்டிருக்கிறார்கள். படத்தின் விஷுவல்ஸ் மிகவும் நன்றாக இருப்பதாக படம் பார்ப்பவர்கள் தெரிவித்து வருகிறார்கள்.
முன்னதாக, ‘கங்குவா தீயாக இருக்கும், வாயை பிளந்து பார்ப்பார்கள்’ என சூர்யா சொன்னது மாதிரியே இருக்கிறது’ என்கிறார்கள் அவரின் ரசிகர்கள்.
தமிழ்நாட்டில் 9 மணிக்கு முதல் காட்சி ஆரம்பித்தாலும், அண்டை மாநிலங்களில் அதிகாலை முதலே பர்ஸ்ட் ஷோ துவங்கிவிட்டது.
இந்நிலையில், சென்னை காசி தியேட்டருக்கு ‘கங்குவா’ படம் பார்க்க வந்த இயக்குனர் சிறுத்தை சிவா, பத்திரிக்கையாளர்களிடம் பேசியுள்ளது இணையத்தில் வைரலாகி வருகிறது. அவர் கூறியதாவது,
‘கங்குவா திரைப்படம் இன்று ரிலீஸ் ஆகியிருக்கிறது. ரொம்ப ரொம்ப சந்தோஷமாக இருக்கு.
அமெரிக்காவில் படம் பார்த்த நண்பர்கள் எல்லாம், கால் பண்ணாங்க. மிகப் பெரிய வெற்றிப் படம்னு சொல்றாங்க. ரொம்ப ரொம்ப திருப்தியா, சந்தோஷமாக இருக்கு’ என்றார்.
இந்நிலையில், ‘கங்குவா’ படத்தின் இரண்டாம் பாகம் எப்போது வரும் என்ற கேள்விக்கு, ‘பொறுத்திருங்கள், விரைவில் மாஸ் நியூஸ் வரும்’ என்றார் இயக்குனர் சிவா.