Pushpa 2

‘கங்குவா’ படம் எப்படி இருக்கு?: பப்ளிக் ரிவ்யூ..

சர்வதேச அளவில், சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடித்த ‘கங்குவா’ படம் ரிலீஸ் ஆகியிருக்கிறது. படம் ஓடும் திரையரங்கம் எல்லாம்
விழாக்கோலம் பூண்டிருக்கிறது.

இந்நிலையில், படம் பார்த்துக் கொண்டிருப்பவர்கள், அது பற்றிய தங்களின் கருத்தை எக்ஸ் தளத்தில் தெரிவித்து வருகிறார்கள். அது குறித்து பார்ப்போம்..

*இது சூர்யாவின் ஒன்மேன் ஷோ. தீயாக இருக்கு. சிறுத்தை சிவாவின் இயக்கம் வேற லெவல். ப்ப்பா என்ன ஒரு விஷுவல்ஸ். படத்தை செதுக்கியிருக்காங்க. டி.எஸ்.பி.யின் பி.ஜி.எம். கொலமாஸ்.

*இரண்டு கதாபாத்திரங்களிலும் சூர்யா அருமையாக நடித்திருக்கிறர். காமெடியும் நன்றாக இருக்கிறது. படம் பரபரப்பாக செல்கிறது. 3டி விஷவல்ஸ் எல்லாம் பயங்கரமாக இருக்கிறது. தியேட்டரில் மட்டுமே பார்க்க வேண்டிய படம்.

*கார்த்தி அப்பப்போ செய்வதை நீங்க எப்பயாச்சுமாவது செய்யலாம்ல சூர்யா?

*சிறுவன் காணாமல் போக, பிறகு நடக்கும் விசாரணை செம. சூர்யாவின் அறிமுக காட்சியே தீயாக இருக்கிறது. சூர்யா ரசிகராகி விட்டார் சிவா.

*அந்த முதலை சண்டை காட்சியை மறக்கவே முடியாது. இரண்டு ஆண்டுகள் கழித்து சூர்யாவின் படத்தை திரையில் பார்த்து மிரண்டு விட்டோம்.

*சிறுத்தை சிவா இதுவரை இல்லாத புது முயற்சி செய்து மிரட்டியிருக்கிறார். டி.எஸ்.பி.யின் இசை சூப்பர். நன்றி டி.எஸ்.பி. கட்டாயம் பார்கக் வேண்டிய படம். நிச்சயம் பிளாக்பஸ்டர் தான். கார்த்தியும் வந்து சர்ப்பிரைஸ் கொடுத்திருக்கிறார்.

*முதல் பாதியை விட, இரண்டாம் பாதி அருமை. கங்குவன் கேரக்டரில் சூர்யா அசத்துகிறார். மிகப் பிரம்மாண்டமாய் படம் கொடுத்த சிவா பாராட்டுக்குரியவர்.

*விஷுவல் எஃபெக்ட்ஸுக்காக கண்டிப்பாக தியேட்டருக்கு செல்ல வேண்டும். மிரண்டு போய்விடுவீர்கள். என்ன ஒரு அருமையான படம். படக்குழுவுக்கு வாழ்த்துக்கள். சூர்யா, சிவாவின் கடின உழைப்பும், புது முயற்சியும் அற்புதம். இந்த மாதிரி படம் பார்த்தது இல்லை. கலக்கிட்டீங்க சிவா.

*சிக்ஸ் பேக் வைத்து மிரட்டியிருக்கிறார் சூர்யா. என்ன ஒரு ஸ்கிரீன் பிரசன்ஸ். வாவ் சூர்யா.

*ஒரு பக்கம் சூர்யா தன் நடிப்பால் சம்பவம் செய்திருக்கிறார். சிவா தன் பங்கிற்கு பெரிய சம்பவம் செய்துவிட்டார். படம் நிச்சயம் வசூல் வேட்டை நடத்தும்.

*சூர்யாவின் கடின உழைப்பு மலைக்க வைக்கிறது. விஷீவல் சீன்ஸ் வேற லெவல். புதிய முயற்சியாய் தெறிக்கிறது இந்த பீரியட் மூவி.

இவ்வாறு தொடர்ந்து உழைப்பு வருகின்றன. இதனால், படக்குழுவினர் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர். கங்குவா படம் இரண்டு பாகங்களாக எடுக்கப்பட்டுள்ளதால், இதன் இரண்டாம் பாகம் எப்போது ரிலீஸ் ஆகும் என்ற எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

suriya starrer kanguva twitter review and rating
suriya starrer kanguva twitter review and rating