Pushpa 2

தனது 50-வது படத்தை தயாரித்து நடிக்கும் சிம்புவின் மெகா ப்ராஜெக்ட்

‘எனது 50-வது திரைப்படத்தால் தமிழ் சினிமாவே பெருமைப்படும்’ என கூறியுள்ளார் சிம்பு..

அதாவது, தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில், தனது 50-வது படத்தை தயாரித்து நடிக்கவுள்ளார் சிம்பு. இது தொடர்பாக..

‘எனது 50-வது படத்தின் புரொமோ ஷூட் அடுத்த மாதம் தொடங்குகிறது. அதனால்தான் இதே கெட்டப்பில் இருக்கிறேன். அது நல்லபடியாக வந்துவிட்டால் வெளியிட திட்டமிட்டுள்ளோம்.

இதன் பட்ஜெட் மிக பெரியது. இப்போது ஓடிடி மற்றும் டிவி உரிமைகள் விற்பனை இறக்கத்தில் உள்ளது. அதனால், நானே தயாரிப்பாளராகி விட்டேன்.

இது பாகுபலி மாதிரியான படமல்ல. ஆனால், தமிழ் சினிமாவை பெருமைப்படுத்தும் படமாக இருக்கும். இதன் படக்குழுவினர் யாருக்குமே இதுவரை ஒப்பந்தம் கூட போடவில்லை. இதிலிருந்தே தமிழ் சினிமாவை எவ்வளவு காதல் கொண்டுள்ளார்கள் என்பது தெரியும்.

இந்தப் படம், நமது திரையுலக வாழ்வில் என்ன பண்ணப் போகிறது என்பதை பற்றிக் கவலைப்படவில்லை. சரியாக போகவில்லை என்றால், என்ன செய்வது என்றெல்லாம் யோசிக்கவில்லை.

இப்படம் வெளிக் கொண்டு வர வேண்டும் என்பதற்காக பணிபுரிய உள்ளோம். இத்தனை ஆண்டுகள் சினிமாவில் இருக்கிறேன், இதற்கு ஏதாவது செய்ய வேண்டும் என்பதற்காக தயாரிப்பு நிறுவனம் தொடங்கியுள்ளேன். இது எனது கடமை. எனது ரசிகர்களுக்காக மட்டுமன்றி, அனைத்து ரசிகர்களுக்காகவும் இந்த தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி இருக்கிறேன்’ என தெரிவித்துள்ளார்.

இப்பட ஒளிப்பதிவாளராக மனோஜ் பரமஹம்சா, இசையமைப்பாளராக யுவன் ஆகியோர் பணிபுரிய உள்ளனர்.

actor str produce about his 50th film project