பிரபல தெலுங்கு நடிகர் ஷர்வானந்துக்கு நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துள்ளது.

தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் ஷர்வானந்த். பல வெற்றி படங்களில் நடித்துள்ள இவர் தமிழில் ஜெய், அஞ்சலி உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான எங்கேயும் எப்போதும் படத்தில் இரண்டாவது நாயகனாக நடித்திருந்தார்.

இந்த படத்தின் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான இவர் தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில் தெலுங்கு நடிகர் ஷர்வானந்துக்கு நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துள்ளது.

இவர்களது நிச்சயதார்த்த விழாவில் நடிகர் ராம்சரண் தன்னுடைய மனைவியுடன் கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்துள்ளார். அது மட்டுமல்லாமல் மேலும் பல திரையுலக பிரபலங்கள் பங்கேற்று உள்ளனர். நடிகர் ஷர்வானந்த்தின் நிச்சயதார்த்த புகைப்படங்கள் வைரலாக்கி வருகிறது.