Vijay 64 Movie
தளபதி 64 படத்தில் இன்னொரு முக்கிய நடிகர் ஒருவர் இணைந்திருப்பதாக தகவல்கள் கசிந்துள்ளன.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தளபதி விஜய் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் விஜய் 64. இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறார்.

ஏற்கனவே இப்படத்தில் விஜய் சேதுபதி, சாந்தனு, அர்ஜுன் தாஸ், மாளவிகா மோகனன், சேத்தன், பிரேம், ராஜேஷ், ஆஹா கல்யாணம் பவித்ரா, பிளாக் ஷீப் அன்பு, விஜே ரம்யா, விஜய் டிவி தீனா என பல நட்சத்திர பிரபலங்கள் இணைந்து நடித்து வருகின்றனர்.

இவர்களை தொடர்ந்து தற்போது இன்னொரு முக்கிய நடிகரும் இப்படத்தில் இணைந்துள்ளாராம். அவர் வேறு யாரும் இல்லை. நடிகர் நாசர் தான்.

ஏற்கனவே எண்ணிடங்காத திரையுலக பிரபலங்கள் இந்த படத்தில் இணைந்திருக்கும் நிலையில் நாசரும் இணைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.