Actor Lal Review on Karnan Movie

கர்ணன் திரைப்படம் எப்படி இருக்கு என்பது குறித்த முதல் விமர்சனம் வெளியாகியுள்ளது. பிரபல நடிகரான லால் இப்படத்தை பார்த்து விமர்சனத்தை பதிவு செய்துள்ளார்.

Actor Lal Review on Karnan Movie : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தனுஷ். இவரது நடிப்பில் அடுத்ததாக கர்ணன் என்ற திரைப்படம் வெளியாக உள்ளது.

இத்திரைப்படத்தை பரியேறும் பெருமாள் படம் இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கியுள்ளார். சந்தோஷ் நாராயணன் படத்திற்கு இசையமைக்க கலைப்புலி எஸ் தாணு இப்படத்தை தயாரித்துள்ளார்.

ஏற்கனவே இந்த படத்தில் இருந்து இரண்டு பாடல்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

தற்போது இந்த படத்தினை பார்த்துள்ளார் நடிகர் லால். படத்தினை பார்த்த இவர் படம் சிறப்பாக வந்திருப்பதாகவும் இந்த படத்தில் தனுஷ் நடிக்கவில்லை, வாழ்ந்திருக்கிறார் என தெரிவித்துள்ளார்.