சூர்யா நடிக்கும் படத்தில் இணையும் நட்சத்திர ஜோடி

ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் ‘கருப்பு’ என்ற படத்தில் சூர்யா நடித்துகிறார் என்பது தெரிந்ததே. இதனைத் தொடர்ந்து ‘ஆவேஷம்’ படத்தின் இயக்குநர் ஜீத்து மாதவன் இயக்கவுள்ள அடுத்த படத்தில் நாயகனாக நடிக்கவுள்ளார் சூர்யா. இதன் முதற்கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதனை சூர்யா தொடங்கியுள்ள புதிய தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கவுள்ளது.
நீண்ட வருடங்கள் கழித்து இதில் காவல்துறை அதிகாரியாக சூர்யா நடிக்கவுள்ளார். இப்படத்தில் சூர்யாவுடன் பகத் பாசில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக தெரிகிறது. மேலும், அவரின் மனைவி நஸ்ரியாவும் சூர்யாவுடன் நடிக்க பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது.
‘ஆவேஷம்’ படத்தின் மூலம் ஜீத்து மாதவன் – பகத் பாசில் நெருங்கிய நண்பர்களாக வலம் வருகிறார்கள். இதனை வைத்தே பகத் பாசில், நஸ்ரியா உள்ளிட்டோர் இதில் நடிக்க சம்மதம் தெரிவித்திருப்பதாக கூறப்படுகிறது.
தற்போது வெங்கி அட்லூரி இயக்கி வரும் படத்தில் கவனம் செலுத்தி வருகிறார் சூர்யா. இதன் இறுதிக்கட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது. அதனை முடித்துவிட்டு ஜீத்து மாதவன் படத்தில் கவனம் செலுத்தவுள்ளார். இதன் படப்பிடிப்பு தமிழக – கேரள எல்லைப் பகுதிகளில் நடத்த படக்குழு திட்டமிட்டிருக்கிறது.
