Web Ads

குபேரா படத்தில் நடிக்க தனுஷ் வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா?

குபேரா படத்தில் நடித்த தனுஷ் வாங்கிய சம்பளம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

actor dhanush salary for kuberaa movie
actor dhanush salary for kuberaa movie

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தனுஷ். இவரது நடிப்பில் குபேரா என்ற திரைப்படம் வருகிற 20-ம் தேதி அதாவது நாளை திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

சேகர் கமுலா இயக்கத்திலும் ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் எல்எல்பி மற்றும் இயக்குனர் சேகர் கம்முலாவின் அமிகோஸ் நிறுவனங்கள் இணைந்து இந்த படத்தை தயாரித்து உள்ளது

மேலும் நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா போன்ற பல பிரபலங்கள் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு எக்கச்சக்கமாக இருந்து வரும் நிலையில் தற்போது இந்த படத்தின் ப்ரீ புக்கிங் தொடங்கி நல்ல வசூல் வேட்டை நடத்தி வருகிறது.

இந்த நிலையில் தனுஷ் இந்த படத்தில் நடிக்க 30 கோடி சம்பளம் வாங்கியுள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த தகவல் இணையத்தில் வெளியாகி வைரலாகி உள்ளது.

actor dhanush salary for kuberaa movie
actor dhanush salary for kuberaa movie