“இது மாதிரி வேறு எந்த படத்திலும் நடிக்க மாட்டேன்”.. ரச்சிதா மகாலட்சுமி பேச்சு..!
இது மாதிரி வேறு எந்த படங்களிலும் நடிக்க மாட்டேன் என ரச்சிதா மகாலட்சுமி பேசியுள்ளார்.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி சீரியல் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் ரச்சிதா மகாலட்சுமி. அதனை தொடர்ந்து சீரியல்களில் நடித்து வந்த இவர் சமீபத்தில் உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி போட்டியாளராக பங்கேற்று இருந்தார்.
பிக் பாஸ் நிகழ்ச்சி முடிந்த பிறகு பாலாஜி முருகதாஸ் நடிப்பில் வெளியான பயர் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த திரைப்படத்தில் மிகவும் கிளாமராக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
என்ன நிலையில் தற்போது ரட்சிதா முடிவு ஒன்று எடுத்துள்ளாராம் அதாவது ஃபயர் படத்தில் நடித்தது போல் வேறு எந்த படத்திலும் நடிக்கப் போவதில்லை என்று சொல்லி இருக்கிறார்.
இந்த தகவல் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
