“என்னை ஆதரிப்பவர்களுக்கும் வெறுப்பவர்களுக்கும் நன்றி” : அனுபமா பரமேஸ்வரன் ஓபன் டாக்..!
என்னை ஆதரிப்பவர்களுக்கும் வெறுப்பவர்களுக்கும் நன்றி எனக் கூறியுள்ளார் அனுபமா பரமேஸ்வரன்.

பிரேமம் படத்தின் மூலம் ரசிகர் மத்தியில் பிரபலமானவர் அனுபமா பரமேஸ்வரன். அதனைத் தொடர்ந்து கொடி சைரன் போன்ற படங்களிலும் நடித்துள்ளார்.
மேலும் சமீபத்தில் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் வெளியான டிராகன் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். தற்போது ஜானகி வெர்சஸ் ஸ்டேட் ஆப் கேரளா படத்தில் நடித்துள்ளார்.
இந்த நிலையில் சமீபத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அனுபமா என்னால் நடிக்க முடியாது என பல ட்ரோல் செய்தனர் அதையும் மீறி இயக்குனர் பிரவீன் என்னை இந்தப் படத்தில் நடிக்க வைத்தார் மேலும் கடந்த ஆண்டு டிராகன் தில்லுஸ்கொயர் போன்ற படங்கள் வெற்றி அடைந்து என்னை உற்சாகப்படுத்தின. என்னை ஆதரிப்பவர்களுக்கும், வெறுப்பவர்களுக்கும் நன்றி கூற கடமைப்பட்டுள்ளேன் என்று கூறியுள்ளார்.
இவரின் இந்த பேச்சு இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
