மீண்டும் மறுஒளிபரப்பாக போகும் விஜய் டிவியின் 2 சூப்பர் சீரியல்கள்.. மகிழ்ச்சியில் ரசிகர்கள்..!
விஜய் டிவியின் இரண்டு ஹிட் சீரியல்கள் மீண்டும் ஒளிபரப்பாக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களுக்கு என தனி ரசிகர் பட்டாளுமே இருந்து வருகின்றனர். ஏற்கனவே விஜய் டிவியில் ஒளிபரப்பான பாரதிகண்ணம்மா சீரியல் முடிவுக்கு வந்த பிறகும் தற்போது மறுஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் மீண்டும் இரண்டு ஹிட் தொடர்களான தென்றல் வந்து என்னைத் தொடும் மற்றும் முத்தழகு சீரியல் மறு ஒளிபரப்பு செய்ய உள்ளதாக வெளியாகி உள்ளது.
ஆனால் வழக்கம் போல் விஜய் டிவியில் இல்லாமல் கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக உள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த தகவல் இணையத்தில் வெளியாகி ரசிகர்களை மகிழ்ச்சி அடைய வைத்து உள்ளது.
