Actor Dhanush in Workout Photo

சிம்புவுக்கு போட்டியாக தனுஷ் ஒர்க் அவுட் செய்யும் முயற்சியில் இறங்கியிருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Actor Dhanush in Workout Photo : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் சிம்பு. அஜித் – விஜய், ரஜினி – கமல் போட்டியை போல சிம்புவுக்கு போட்டி தனுஷ் தான்.

தொடர்ந்து தோல்விகளை சந்தித்து வந்த சிம்பு தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் மாநாடு என்ற படத்திலும் சுசீந்திரன் இயக்கத்தில் ஈஸ்வரன் என்ற படத்திலும் நடிக்கிறார்.

இதிலும் சிம்புவுக்கு போட்டியாக களம் இறங்கிய தனுஷ் - பிரபல நடிகர் வெளியிட்ட புகைப்படம்.!!

ஈஸ்வரன் திரைப்படத்திற்காக உடல் எடை கூடி இருந்த சிம்பு கடுமையான ஒர்க்கவுட் மூலம் மிகவும் ஸ்லிம்மாக மாறியுள்ளார். லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகின.

தற்போது சிம்புவுக்கு போட்டியாக தனுஷூம் வொர்க் அவுட் செய்யும் புகைப்படம் ஒன்றை நடிகரும் இசையமைப்பாளருமான ஜிவி பிரகாஷ் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

இதனால் சிம்புவா தனுஷா இருவரில் யார் மாஸ் என்ற விவாதம் பரக்கமுகள் ரசிகர்கள் மத்தியில் தொடங்கியுள்ளது.