சூர்யா போல தனுஷ் பிஸி: வெற்றிமாறன் பாணியில் ஹெச்.வினோத் திட்டம்..

தளபதி விஜய் நடிக்கும் ‘ஜனநாயகன்’ படம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இப்படத்தை தொடர்ந்து, ஹெச்.வினோத், ரஜினியின் நடிப்பில் ஒரு படத்தை இயக்குவார் என சொல்லப்பட்டது.
ரஜினியை சந்தித்து ஹெச்.வினோத் கதை சொன்னதாகவும், அந்த கதை ரஜினிக்கு பிடித்துவிட்டதால் ‘தலைவர்-173’ பட வாய்ப்பு ஹெச்.வினோத்திற்கு தான் என்றும் தகவல்கள் வந்தன.
ஆனால், கடைசியில் அந்த தகவல்கள் எல்லாம் வதந்திகள் என தெரிய வந்தது. பின்னர், ஹெச்.வினோத் அடுத்ததாக தனுஷை வைத்து படமெடுப்பார் என உறுதியானது. ஆனால், தற்போது தனுஷ் செம பிஸியாக இருப்பதால், ஹெச்.வினோத் சற்று காத்துக்கொண்டிருக்கும் நிலை வந்துள்ளது. எனவே, தனுஷ் கால்ஷீட் கிடைக்கும் வரை ஹெச்.வினோத் காத்துகொண்டு இருப்பாரா? அல்லது அதற்குள் வேறொரு படத்தை குறுகிய காலகட்டத்திற்குள் இயக்குவாரா?
ஏற்கனவே ஹெச்.வினோத் யோகி பாபுவை ஹீரோவாக வைத்து ஒரு ஸ்மால் பட்ஜெட் படத்தை இயக்க இருந்ததாக தகவல்கள் வந்தன. ஒருவேளை தனுஷ் படத்தை துவங்குவதற்குள் ஹெச்.வினோத் அந்த இடைவெளியில் வேறொரு படத்தை இயக்குவாரா என்பது கேள்விக்குறியாக உள்ளது. இது பற்றி விரைவில் அறிவிப்பு வெளியாகலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
முன்னதாக ‘வாடிவாசல்’ தாமதமானதை தொடர்ந்து சூரியா-வெற்றிமாறன் இருவரும் வேறு வேறு படங்களில் பிஸியாக உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
