Kaithi Movie
தீபாவளி அன்று இரண்டு படங்கள் வெளியாக உள்ளது. பிகில் மற்றும் கைதி. நடிகர் ஒருவர் கைதி படம் நல்ல படம் என்று கூறியுள்ளார்.

கலக்கப் போவது யாரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பின் தமிழ் சினிமாவில் நடிகராக உள்ளவர் தீனா.

இவர் தனுஷ் இயக்கிய பவர் பாண்டி படத்தில் அறிமுகமானவர். அதனை தொடர்ந்து தமிழ் படங்களில் நடித்து வருகிறார்.

இ‌ந்த நிலை‌யி‌ல், அவர் அளித்த பேட்டி ஒன்றில் பிகில் vs கைதி பற்றி ஒரு கேள்வி கேட்கப்பட்டது. பிகில் படம் ஒரு பெரிய நடிகரின் பெரிய பட்ஜெட் படம். அப்படி இருக்க கைதி படம் திரையிட திட்டமிட்டு உள்ளீர்கள் இதற்கு காரணம் என்ன என்று கேட்கப்பட்டது.

மேலும் இரண்டு ஆப்ஷன் தரப்பட்டது. ஒன்று நாங்கள் நல்ல படம் பண்ணிருக்கோம், இரண்டாவது எங்களுக்கு பயம் இல்லை. இதில் ஒன்றை சொல்லும் படி கேட்க்கப்பட்டது.

அதற்கு தீனா, நாங்கள் நல்ல படம் பண்ணியிருக்கோம் என்று பதில் அளித்தார்.