அஜித் நடிப்பில் பிரம்மாண்ட திரைப்படம்; ரெடியாகிறார் இயக்குனர் தனுஷ்

அஜித் சென்னை திரும்பியவுடன், அவரை தனுஷ் சந்திக்க உள்ளார் என எதிர்பார்க்கப்படுகிறது. இது பற்றிய விவரம் பார்ப்போம்..
‘தல’ அஜித் நடிப்பில் அவரது தீவிர ரசிகர் ஆதிக் ரவிச்சந்திரன் படம் குறித்து தெரிவிக்கையில், ‘குட் பேட் அக்லீ’ வெறும் ஆக்சனை மட்டுமே கொண்ட படமாக இருக்காது, குடும்பங்கள் கொண்டாடும் படமாகவும் இருக்கும்.
தந்தை – மகன் இடையே உள்ள அன்பையும் அழுத்தமாக சொல்லப்பட்டு உள்ளது. படத்தில் அஜித்துக்கு மகனாக, ஏற்கனவே அஜித்துடன் ‘வலிமை’ படத்தில் வில்லன் ரோலில் நடித்திருந்த கார்த்திகேயா நடித்துள்ளார். படத்தின் டைட்டில் அஜித் சார் கொடுத்ததுதான்’ என கூறினார்.
அஜித் நடிப்பில் வெளியான ‘வரலாறு’ படத்தில், அஜித்தின் மகனாக குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்தவர் கார்த்திகேயா என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், அஜித், Michelin 12H MUGELLO 2025 Qualifying Session-னில் கலந்து கொண்ட பின்னர், ரேசிங் அணியின் ஓனராகவும், டிரைவர் ஆகவும் தற்போது இருக்கிறேன். எதிர்காலத்தில் கார் ரேஸில் தொடர்ந்து பல வருடங்கள் பயணிக்க ஆர்வமாக இருக்கிறேன்’ என தனது திட்டத்தையும் வெளிப்படுத்தி உள்ளார.
அக்டோபர் மாதம் வரை அஜித் தொடர்ந்து எந்தவொரு படப்பிடிப்பிலும் கலந்து கொள்ளாமல், ரேசிங்கில் மட்டுமே முழு கவனம் செலுத்த உள்ளார். அதன் பின்னர், தான் நடிக்க உள்ள அடுத்த படம் குறித்த அறிவிப்பை வெளியிடுவார் என தெரிகிறது.
அஜித் கார் ரேஸில் கலந்து கொள்வது அவருடைய ரசிகர்களுக்கு மகிழ்ச்சியான தகவல் என்றாலும், ரசிகர்களுக்காக அஜித் வருடத்திற்கு ஒரு படத்திலாவது நடிக்க வேண்டும் என்பதே பலரது கோரிக்கையாக உள்ளது.
இதனிடையே, சில தினங்களுக்கு முன்பு அஜித்திடம் தொலைபேசி வாயிலாக கதையொன்றை தனுஷ் கூறியிருப்பதாக தகவல் வெளியானது. இதனை தனுஷ் தரப்பு மறுத்தது. ஆனால், தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் இதனை உறுதி செய்திருக்கிறார். அஜித் – தனுஷ் கூட்டணி பேச்சுவார்த்தை ஆரம்ப கட்டத்தில் இருப்பதாக உறுதிப்படுத்தி இருக்கிறார்.
விரைவில் அஜித்தை நேரில் சந்தித்து முழுமையான கதையினை கூற இருக்கிறார் தனுஷ். அஜித் சென்னை திரும்பியவுடன், இந்த சந்திப்பு நடக்கும். இப்படம் மிக பிரம்மாண்டமாக உருவாகும் என தெரிகிறது. இதனை ‘தல’ மற்றும் தனுஷ் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துள்ளனர்.
