சிவ பக்தரான ‘கண்ணப்பா’ படம் பற்றிய பேச்சு: வைரலாகும் நிகழ்வு
‘கண்ணப்பா’ திரைப்படம் குறித்த தகவல்கள் பார்ப்போம்..
இறைவனாகிய சிவபெருமானால் ஆட்கொள்ளப்பட்டு, சிவன் தொண்டுக்கே தன்னை அர்ப்பணித்துக் கொண்டவர் கண்ணப்ப நாயனார். முற்பிறவியில் கண்ணப்ப நாயனார் அர்ஜுனனாக இருந்தார். அர்ஜுனன் மிகப்பெரிய சிவபக்தனாக இருந்தார்.
அவர் மகாபாரதப் போரில் தன் மகனான அபிமன்யூவை கொன்றவர்களை கொல்ல, உண்ணாமல், சிவபூஜையும் செய்யாமல் சிவபெருமானிடம் வரம் கேட்பதற்காக கைலாசம் சென்றார். அங்கு சிவனைப் பார்த்து மெய்மறந்த அர்ஜூனன், மகனை கொன்றவர்களை கொல்ல வேண்டும் என்ற வரத்தை மறந்து, ‘அய்யனே உன்னை என்றுமே மறவாத வரத்தை தரவேண்டும்’ என்று கேட்டார். ‘அடுத்த பிறவியில் உனக்கு கிடைக்கும்’ என சிவபெருமான் வரம் கொடுத்தார்.
அந்த வரத்தின் பலனாக, கண்ணபிரான் தீவிர சிவ பக்தராக இருந்தார். இப்படி வரலாற்று சிறப்பு பெற்றது கண்ணப்ப நாயனார் வாழ்வியல். தற்போது, அவரது சிவதொண்டு திரைப்படமாக வருகிறது ‘கண்ணப்பா’ என.!
அதாவது தெலுங்கு நடிகர் விஷ்ணு மஞ்சு நடிப்பில் “கண்ணப்பா” திரைப்படம் ஏப்ரல் 25-ம் தேதி தமிழ், தெலுங்கு, ஹிந்தி, ஆங்கிலம், கன்னடம் உள்ளிட்ட பல மொழிகளில் வெளியாகிறது. இந்த படத்தில் சரத்குமார், ப்ரீத்தி முகுந்தன், ராகுல் ராமகிருஷ்ணா, பிரம்மானந்தம், மோகன்பாபு ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
மேலும் மோகன்லால், பிரபாஸ், அக்சய் குமார், காஜல் அகர்வால் போன்ற முன்னணி நட்சத்திரங்கள் சிறப்பு தோற்றத்தில் இணைந்துள்ளனர். இந்நிலையில், இந்த படத்தில் முக்கியமான பாத்திரத்தில் நடித்த ரகுபாபு பேசுகையில்,
‘எங்கள் படத்தைக் ட்ரோல் செய்தால், சிவனின் கோபத்துக்கு ஆளாகி விடுவீர்கள். அவர் யாரையும் விட்டு வைக்கமாட்டார். எச்சரிக்கை!’ என்று கூறியிருக்கிறார். இது சர்ச்சையானாலும், இதுவும் சிவபக்தியின் ஒரு வெளிப்பாடுதான், ஓம்நமசிவாய எனவும் இணையத்தில் பகிரப்பட்டு தெறிக்கிறது.