‘தல’ அஜித் நடிக்கும் ‘விடாமுயற்சி’: டீசர் விமர்சனம்..
‘தல’ அஜித் ரசிகர்களின் எதிர்பார்ப்புக்கு ஏற்ப இன்று ‘விடாமுயற்சி’ டீசர் வெளியாகி, இப்படம் பொங்கல் ரிலீஸ் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது 1.48 செகன்ட்ஸ் ஓடும் டீசர் குறித்து பார்ப்போம்.
அஜித் நடிப்பில், மகிழ் திருமேனி இயக்கத்தில், லைகா நிறுவன தயாரிப்பில் இன்று வெளியாகியுள்ளது ‘விடாமுயற்சி’ படத்தின் டீசர்.
இந்த டீசரின் தொடக்கத்தில் அர்ஜுனின் கேங் கார் ஒன்றின் டிக்கியில் இருந்து, ஒரு மனிதரை வெளியே இழுத்து போடுகிறார்கள்.
இதனைத் தொடர்ந்து, அஜித்தின் இன்ட்ரோ தொடங்கி, திரிஷா என கதாபாத்திரங்கள் தொடர்பான ஷாட்ஸ் அடுத்தடுத்த ஃபிரேம்களாக விரிகின்றன.
அஜித் ரசிகர்களுக்கு விருந்தளிக்கக் கூடிய கார் சேஸிங், அதிரடியான ஆக்ஷன்ஸ் டீசரில் இடம்பெற்றுள்ளன. அதே நேரம் ஹாலிவுட் திரில்லர் பாணியிலான காட்சியமைப்புகளும் தெறிக்கின்றன.
மொத்தத்தில், டீசர் வெறும் காட்சிகளின் தொகுப்பாகவே இருப்பதால், படத்தின் டீசரின் வாயிலாக கதையை சொல்ல விரும்பவில்லை போல தெரிகிறது. அவ்வகையில், டீசர் டீசன்டாக திரைக்கு அழைக்கிறது. அதற்கேற்ப செம ஆக்டிவ்வாக ‘தல’ அஜித் பிளாக் அன் பிளாக் காஸ்ட்யூமில் வேற லெவலில் எகிறுகிறார்.
டீசரில் முக்கியமான கேரக்டரான நடிகர் ஆரவ் இடம் பெறவில்லை. ஒருவேளை, முதல் ஃபிரேமில் அர்ஜுன் டீம் டிக்கியிலிருந்து இழுத்துப் போட்ட நபர் ஆரவ் தானோ? பார்க்கலாம்..!
மற்றபடி, அனிருத்தின் பின்னணி இசை கவனம் ஈர்க்கிறது. ஓம் பிரகாஷின் ஒளிப்பதிவு திரில்லர் படத்துக்கே உரிய அடர்த்தியான இருட்டு மற்றும் வண்ணக் காட்சிகளை கண்முன் நிறுத்துகிறது. மேலும், அமர்க்கள நிகழ்வுகளை ‘தல’ பொங்கலில் கண்டு களிப்போம்.!