ரன்பீர் கபூரின் பிறந்தநாளை முன்னிட்டு “ராமாயணா” படத்தின் பிடிஎஸ் வீடியோ வெளியீடு

Web Ads

நடிகர் ரன்பீர் கபூரின் பிறந்தநாளை முன்னிட்டு, ‘ராமாயணா’ படக்குழு ரன்பீர் கபூர் ராமர் கதாபாத்திரத்திற்காக தயாரான விதத்தை வெளிப்படுத்தும் சிறப்பு BTS காட்சிகளை வெளியிட்டுள்ளது.

இந்த வீடியோவில், ராமர் கதாபாத்திரத்திற்காக ரன்பீர் மேற்கொண்ட உடல் மற்றும் நடிப்பு தயாரிப்புகள், தோற்ற மாற்றங்கள் மற்றும் படப்பிடிப்பு அனுபவங்கள் இடம்பெற்றுள்ளன. இதன் மூலம், ராமர் கதாபாத்திரமாக தன்னை மாற்றிக்கொண்ட விதத்தை ரசிகர்கள் நெருக்கமாகக் காண முடிகிறது.

‘ராமாயணா’ போன்ற பிரம்மாண்டமான இதிகாசப் படத்திற்கு நடிகர்களைத் தேர்வு செய்வதில் இருக்கும் முக்கியத்துவம் குறித்து இயக்குநர் நிதேஷ் திவாரி இந்த BTS காட்சியில் பேசியுள்ளார். ராமர் கதாபாத்திரத்தை ஏற்றுள்ள ரன்பீர், அந்த கதாபாத்திரத்தின் மீதான மரியாதையுடனும், அதற்குரிய பொறுப்புணர்வுடனும் நடித்ததாக அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், தசரதராக நடிக்கும் அருண் கோவில், சீதையாக சாய் பல்லவி மற்றும் லட்சுமணராக ரவி துபே ஆகியோரும் ரன்பீரின் தயாரிப்பு மற்றும் கதாபாத்திரத்திற்கான பொருத்தம் குறித்து தங்களது கருத்துகளைப் பகிர்ந்துள்ளனர்.

Web Ad 2

ராமாயணத்தை உலகளவில் கொண்டு செல்லும் நோக்கில், கிழக்கு மற்றும் மேற்கத்திய திரையுலகின் முன்னணி திறமைகளை தயாரிப்பாளர் நமித் மல்ஹோத்ரா ஒருங்கிணைத்துள்ளதாகவும் BTS வீடியோவில் காட்டப்பட்டுள்ளது. சர்வதேச புகழ்பெற்ற ஆக்ஷன் இயக்குநர் டெர்ரி நோட்டரி உள்ளிட்ட பல்வேறு கலைஞர்கள் படக்குழுவில் இணைந்துள்ளனர்.

நிதேஷ் திவாரி இயக்கத்தில் உருவாகும் ‘ராமாயணா’வில் ரன்பீர் கபூர் ராமராகவும், சாய் பல்லவி சீதையாகவும், ராக்கிங் ஸ்டார் யஷ் ராவணனாகவும், சன்னி தியோல் அனுமனாகவும், ரவி துபே லட்சுமணராகவும் நடிக்கின்றனர்.

இப்படம் இரண்டு பாகங்களாக வெளியாக உள்ளது. முதல் பாகம் 2026 தீபாவளியிலும், இரண்டாம் பாகம் 2027 தீபாவளியிலும் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ், இந்தி, தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் இப்படம் வெளியாக உள்ளது.