ஜனநாயகன் படத்தின் டிரெய்லர் ரிலீஸ் எப்போது தெரியுமா?வாங்க பார்க்கலாம்.!!

ஜனநாயகன் படத்தின் டிரெய்லர் ரிலீஸ் தேதி குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் ஜனநாயகன் என்ற திரைப்படம் பொங்கலை முன்னிட்டு ஜனவரி ஒன்பதாம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
எச் வினோத் இயக்கத்திலும், கே.வி.என் ப்ரொடக்ஷன் தயாரிப்பிலும் உருவாகியுள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். மேலும் பாபி தியோல், பிரியாமணி, பூஜா ஹெக்டே, மமீதா பைஜூ போடுற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
இது விஜயின் கடைசி படம் என்பதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு எக்கச்சக்கமாக இருந்து வருகிறது இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா டிசம்பர் 27ஆம் தேதி மலேசியாவில் பிரம்மாண்டமாக நடைபெறுவதாக அறிவித்திருந்தனர்.
அதனை தொடர்ந்து தற்போது இந்த படத்தின் டிரைலர் குறித்து தகவல் வெளியாகியுள்ளது அதாவது இந்த படத்தின் டிரைலர் ஜனவரி 1ஆம் தேதி நியூயரை முன்னிட்டு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த தகவல் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
