இயக்குநர் மிஷ்கின் கொடுத்த ‘கிஸ்’: சுவாரஸ்ய தகவல்..

Web Ads

கதைக்கேற்ற தலைப்பு வைக்கப்படுவது சிறப்பாக பார்க்கப்படுகிறது. அவ்வகையில், இதோ ஒரு நிகழ்வு..

நடன இயக்குநர் சதீஷ் கிருஷ்ணன் இயக்குநராக அறிமுகமாகும் படம் ‘கிஸ்’. இதில் கவின் நாயகனாக நடித்துள்ளார். நாயகியாக ப்ரீத்தி அஸ்ராணி நடித்துள்ளார்.

மேலும் தேவயானி, கவுசல்யா உள்பட பலர் நடித்துள்ளனர். ரோமியோ பிக்சர்ஸ் ராகுல் தயாரித்துள்ள இப்படத்துக்கு ஜென் மார்டின் இசை அமைத்துள்ளார். ஹரீஷ் ஒளிப்பதிவு செய்துள்ளார். இன்றைய இளைய தலைமுறையின் காதலைக் கொண்டாடும் படமாக உருவாகியுள்ளது.

படம் பற்றி இயக்குநர் சதீஷ் கிருஷ்ணன் கூறும்போது, ‘கிஸ்’ என்ற தலைப்பு முதலில் மிஷ்கின் சாரிடம் இருந்தது. ஆனால், இந்தக் கதைக்கு ‘கிஸ்’ தலைப்புதான் பொருத்தமாக இருக்கும் என அவரிடம் கேட்டோம். உடனே கொடுத்தார்.

கவினின் முதல் படத்துக்கு நான் நடன இயக்குநராகப் பணியாற்றினேன். இயக்குநராக நான் அறிமுகமாகும் படத்தில் அவர் ஹீரோவாக நடிக்கிறார். இது எனக்குப் பெருமையான தருணம். ப்ரீத்தி அஸ்ராணி, விடிவி கணேஷ் என எல்லோரும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளனர்’ என்றார்.

director mysskin given kiss title says satish krishnan
director mysskin given kiss title says satish krishnan