பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள LIK படத்தின் ரிலீஸ் தேதி எப்போது தெரியுமா?

பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள LIK படத்தின் ரிலீஸ் தேதி குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

கோமாளி படத்தை இயக்கிய அதன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் பிரதீப் ரங்கநாதன்.அதனை தொடர்ந்து லவ் டுடே, டிராகன் போன்ற ஹிட் படங்களை நடித்து தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளார் என்றே சொல்லலாம்.இவரது நடிப்பில் டிராகன் என்ற திரைப்படம் குறைந்த பட்ஜெட்டில் உருவாகி வசூல் வேட்டையாடி இருந்தது.
அதனைத் தொடர்ந்து விக்னேஷ் சிவன் இயக்கத்தில் LIK என்ற படத்தில் நடித்துள்ளார்.இந்த படத்தில் பிரதீப் ரங்கநாதனுக்கு ஜோடியாக கீர்த்தி செட்டி நடித்து உள்ளார்.
இந்த நிலையில் தற்போது இந்த திரைப்படம் வருகிற அக்டோபர் மாதம் 14ஆம் தேதி தீபாவளியை முன்னிட்டு திரைக்கு வர இருப்பதாக அறிவித்துள்ளனர்.
இந்த தகவல் இணையத்தில் வெளியாகி ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு அதிகரிக்க செய்துள்ளது.
