அமெரிக்காவில் ‘மாஸ்’ காட்டும் ரஜினியின் ‘கூலி’ திரைப்படம்..

Web Ads

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள ‘கூலி’ படம் விரைவில் ரிலீஸாக உள்ளது என்பது தெரிந்ததே. இப்படத்தில், தேவா என்ற நெகட்டிவ் ரோலில் ரஜினி கேங்ஸ்டராக வருகிறார். ஆக்சன் அதிரடியாய் தெறிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், ‘கூலி’ படம் ரூ.1000 கோடி வசூல் செய்யுமா இல்லை, அதையும் தாண்டி வசூலிக்குமா எனவும் பேசப்படுகிறது. ரூ. 1000 கோடி வசூலை மனதில் வைத்துப் படம் எடுக்கவில்லை என்கிறார் லோகேஷ் கனகராஜ். மேலும் ரூ. 1000 கோடி பிரஷரும் இல்லை’ என கூறியுள்ளார்.

முன்னதாக, வலைதளங்களில் இருந்து ஒதுங்கியிருந்த லோகேஷ் கனகராஜ், தற்போது திரும்பி வந்துவிட்டார். இந்நிலையில், கூலி படம் தொடர்பான நிகழ்ச்சிக்கு வந்த இடத்தில் ஒரு குழந்தை, லோகேஷை பார்த்து ‘லோகி மாமா ஐ லவ்யூ’ என்று சொன்னது. அதைக் கேட்ட லோகேஷோ, அந்த செல்லத்தின் தலையில் கை வைத்து லவ் யூ டூ என தெரிவித்த நிகழ்வும் தற்போது வைரலாகி வருகிறது.

‘கூலி’ படம் 16 நாட்களில் அதாவது ஆகஸ்ட் 14-ந்தேதி பிரம்மாண்டமாக ரிலீஸாக உள்ளது. இந்நிலையில், அமெரிக்காவில் ‘கூலி’ படத்திற்கான டிக்கெட் முன்பதிவில், இதுவரை 6 லட்சம் அமெரிக்க டாலர்கள் கிடைத்திருக்கிறது. அதாவது ரூ. 5.23 கோடி கிடைத்துள்ளது.

கனடாவில் இன்னும் டிக்கெட் முன்பதிவு துவங்கவில்லை. அங்கும் டிக்கெட் முன்பதிவு துவங்கினால், வசூல் மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. லோகேஷ் கனகராஜ், ரஜினிகாந்த் முதல் முறையாக கூட்டணி சேர்ந்து உருவாக்கியிருக்கும் இப்படம் ரிலீஸான அன்று மட்டும் ரூ.100 கோடி வசூல் செய்யும் எனவும் கணிக்கப்படுகிறது.

coolie movie collects 600k dollars advance booking in the usa
coolie movie collects 600k dollars advance booking in the usa