ஆகஸ்ட் மாதம் ரிலீஸாகும் திரைப்படங்களின் லிஸ்ட்..

ஆகஸ்ட் மாதம் தியேட்டர் மற்றும் ஒடிடி.யில் ரிலீஸாகும் படங்கள் பற்றிப் பார்ப்போம்..
*சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கிய ‘கூலி’ படம் ஆகஸ்ட் மாதம் 14-ந் தேதி வெளியாகிறது. முன்னதாக, ஜூலை 31-ந்தேதி விஜய் தேவரகொண்டா நடித்த ‘கிங்டம்’ படம் திரைக்கு வருகிறது. இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.
*உதயா – யோகிபாபு நடித்த ‘அக்யூஸ்ட்’ படமும், வெற்றி நாயகனாக நடித்த ‘முதல் பக்கம்’ படமும் வெளியாகிறது. மேலும் போகி, கதிர் நாயகனாக நடித்த மீஷா, டிஜே அருணாச்சலம், பிக்பாஸ் ஜனனி ஜோடியாக நடித்த ‘உசுரே’ படமும் பிக்பாஸ் தர்ஷன் நாயகனாக நடித்துள்ள ‘சரண்டர்’ உள்ளிட்ட சிறு பட்ஜெட் படங்களும், தனுஷ் முதன்முதலாக நடித்த இந்திப் படத்தின் தமிழ்ப் பதிப்பான ‘அம்பிகாபதி’ படமும் ஆகஸ்ட் 1-ந்தேதி ரீ ரிலீஸ் ஆகிறது.
*மேலும், ஆகஸ்ட் 1-ந்தேதி ஜி.வி.பிரகாஷ் குமார் நடித்த ‘பிளாக்மெயில்’ மற்றும் தர்ஷன் நாயகனாக நடித்துள்ள ‘ஹவுஸ்மேட்ஸ்’ ஆகிய படங்களும் வெளியாகிறது.
*ஆகஸ்ட் 1-ந்தேதி ஓடிடியில் மொத்தம் 4 தமிழ்ப்படங்கள் ரிலீஸ் ஆகிறது. விக்ரம் பிரபு நடிப்பில் வெளியாகி வரவேற்பை பெற்ற ‘லவ் மேரேஜ்’ படம் அமேசான் பிரைம் ஓடிடியில் ஸ்ட்ரீம் ஆகிறது. இதனுடன் ராம் – மிர்ச்சி சிவா கூட்டணியில் உருவான ‘பறந்து போ’ படமும் ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகிறது.
*மேலும் ஸ்ரீகணேஷ் இயக்கத்தில் சித்தார்த், சரத்குமார், தேவயானி நடித்த ‘3 பிஹெச்கே’ படமும் ஆகஸ்ட் 1-ந்தேதி முதல் அமேசான் பிரைமில் வெளியாகிறது. அதேபோல், விஜய் சேதுபதியின் மகன் சூர்யா சேதுபதி நடித்த ‘பீனிக்ஸ் வீழான்’ படமும் ஆகஸ்ட் 1-ந் தேதி வெளியாகிறது.
