Web Ad 2

நயன்தாரா நடிக்கும் ‘டாக்ஸிக்’ படப்பிடிப்பு தளத்தில், முன்னெச்சரிக்கை நடவடிக்கை..

Web Ads

யாஷ், நயன்தாரா, ஹூமா குரேஷி என பலர் நடிக்கும் ‘டாக்ஸிக்’ படத்தின் தகவல்கள் காண்போம்..

‘டாக்ஸிக்’ படத்தை கீது மோகன்தாஸ் இயக்கி வருகிறார். கேவிஎன் புரொடக்சன்ஸ் மற்றும் மான்ஸ்டர் மைண்ட் கிரியேஷன்ஸ் சார்பில் வெங்கட் கே. நாராயணா, யாஷ் இணைந்து தயாரிக்கின்றனர்.

கன்னடம், ஆங்கில மொழிகளில் உருவாகும் இப்படம் இந்தி, தெலுங்கு, தமிழ், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் மொழி மாற்றம் செய்யப்பட்டு வெளியாக இருக்கிறது. இதன் ஷுட்டிங் மும்பை கோரேகானில் சமீபத்தில் தொடங்கியுள்ளது.

அங்கு பயங்கரமான ஆக்சன் காட்சிகளின் படப்பிடிப்பு நடந்து வருவதாகவும் யாஷ், தாரா சுதாரியா, அக் ஷய் ஓபராய், ஹூமா குரேஷி பங்குபெறும் காட்சிகள் படமாக்கப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில், சமீபகாலமாக ஆக்சன் காட்சிகளைப் படமாக்கும்போது, அதிக விபத்துகள் ஏற்படுவதால் படப்பிடிப்புக்கு முன் அனைவருக்கும் பயிற்சி அளிக்கப்பட்டு உள்ளது.

இஸ்ரேலிய தற்காப்புக் கலையான கிரவ் மகா, பிலிப்பைன்ஸ் கலையான பிலிப்பினோ காளி உள்ளிட்ட ஆக்‌ஷன் வகைகளை ஹாலிவுட் ஸ்டண்ட் இயக்குநர்களான ஜேஜே பெர்ரி, ஜியோர்ஜி ஐராஜுலி ஆகியோர் இந்த படத்துக்காக அமைத்து வருகின்றனர். இதனால், இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

stunt training for toxic movie
stunt training for toxic movie