கூலி படத்தின் முதல் விமர்சனத்தை சொன்ன ரஜினிகாந்த்.. என்ன சொல்லி இருக்கிறார் பாருங்க..!

கூலி படத்தின் முதல் விமர்சனத்தை ரஜினிகாந்த் கூறியுள்ளார்.

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக ஜொலித்து வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இவரது நடிப்பில் கூலி என்ற திரைப்படம் வெளியாக உள்ளது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.
மேலும் நாகார்ஜுனா, உபேந்திரா, ஸ்ருதிஹாசன், சத்யராஜ் போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்தத் திரைப்படம் ஆகஸ்ட் மாதம் 14-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்த படத்தின் ரிலீஸ்காக ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கும் நிலையில் இந்த படத்தின் முதல் விமர்சனம் பற்றி ரஜினிகாந்த் பேசியுள்ளார்.
அதாவது இந்த படத்தின் முதல் பாகத்தை ரஜினிகாந்த் பார்த்துவிட்டு படம் அமோகமாக வந்திருப்பதாக மகிழ்ச்சியை வெளிப்படுத்தி உள்ளார். இந்த தகவல் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

