ரஜினியின் பிறந்தநாளில் ரசிகர்களுக்கு காத்திருக்கும் சர்ப்ரைஸ்..!

Web Ads

ரஜினியின் பிறந்த நாளில் ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் காத்திருக்கிறது.

rajinikanth in annamalai movie re release update
rajinikanth in annamalai movie re release update

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக ஜொலித்து வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவர் தற்போது கூலி என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார்.

அதனைத் தொடர்ந்து நெல்சன் திலிப் குமார் இயக்கத்தில் ஜெயிலர் 2 என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

இந்த நிலையில் இந்த வருடம் ரஜினிகாந்த் பிறந்த நாளில் அவரது நடிப்பில் வெளியாகி ஹிட் கொடுத்த அண்ணாமலை படத்தை தமிழக மற்றும் கேரளாவில் ரி ரிலீஸ் செய்யப் போவதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்த தகவல் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. ஏற்கனவே ரீ ரிலீஸ் படங்களுக்கு ரசிகர்கள் பெரும்பாலும் வரவேற்பை கொடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.

rajinikanth in annamalai movie re release update
rajinikanth in annamalai movie re release update