குக் வித் கோமாளி நிகழ்ச்சி சீசன் 6ல் இரண்டு நடுவர்கள் கிடையாது.. வெளியான புதிய ப்ரோமோ..!

Web Ads

குக் வித் கோமாளி சீசன் சிக்ஸ் குறித்து புதிய ப்ரோமோ வெளியாகி உள்ளது.

cook with comali season 6 latest promo video
cook with comali season 6 latest promo video

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளுக்கான தனி ரசிகர்கள் இருப்பது வழக்கம் அதிலும் குக் வித் கோமாளி நிகழ்ச்சி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வந்த நிகழ்ச்சிகளில் ஒன்று.

Web Ad 2

சமையல் ஒரு பக்கம் இருந்தாலும் நகைச்சுவைக்கும் பஞ்சம் இருக்காது. அப்படி ஐந்து சீசன்களை கடந்த நிலையில் தற்போது ஆறாவது சீசன் ஒளிபரப்பாக உள்ளது. புது ஸ்கூல் புது ரூல் என இந்த நிகழ்ச்சி முற்றிலும் புதுவிதமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஏற்கனவே முதல் நான்கு சீசன்களுக்கு செஃப் தாமு மற்றும் செப் வெங்கடேஷ் பட் நடுவர்களாக இருந்த நிலையில் தற்போது ஐந்தாவது சீசனில் இருந்து மாதம்பட்டி ரங்கராஜ் இணைந்துள்ளார். ஆனால் ஆறாவது சீசனில் இவர்களுடன் இன்னொரு செஃப் இணைந்துள்ளார்.

ஆம் அதாவது சீசன் 6 நிகழ்ச்சிகள் மாதம்பட்டி ரங்கராஜ் மற்றும் செப் தாமு உடன் இணைந்து செஃப் கவுசிக் மூன்றாவது நடுவராக இருக்கப் போகிறார். இது குறித்த ப்ரோமோ வீடியோவில் மாதம்பட்டி ரங்கராஜ் மற்றும் தாமு இருவரும் செஃப் கௌஷிக்கை அறிமுகம் செய்வது போல வெளியாகி உள்ளது.

இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.