ரவிமோகன் நடிக்கும் படத்திலிருந்து ஹாரீஸ் ஜெயராஜ் விலகல்: அவருக்கு பதில் இவர்?

ரவிமோகன் படத்தில் ஹாரீஸ்க்கு பதில் வேறு இசையமைப்பாளர் கமிட்டாகி உள்ளதாக சொல்லப்படுகிறது. இது பற்றிப் பார்ப்போம்..
ஜெயம் ரவிக்கு கடந்த ஆண்டு வெளிவந்த சைரன், பிரதர் ஆகிய படங்கள் தோல்வியை சந்தித்தன. இத்துடன் விவாகரத்து நிலை வேறு. இதையடுத்து, பெயரை மாற்றினார். பின் அவருக்கு இந்த ஆண்டு முதல் படமே சென்டிமென்டாக வெற்றி கிடைத்தது.
கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் அவர் நடித்த ‘காதலிக்க நேரமில்லை’ ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதனைத் தொடர்ந்து ‘ஜீனி’ படமும் மார்ச் மாதம் திரைக்கு வர வாய்ப்புள்ளது.
இதுதவிர ‘பராசக்தி’ திரைப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு வில்லனாகவும் நடித்து வருகிறார். இப்படத்தை தொடர்ந்து ரவி மோகன் நடிக்கும் 34-வது படத்தை ‘டாடா’ பட இயக்குனர் கணேஷ் கே.பாபு இயக்குகிறார். இப்படத்திற்கு இசையமைப்பாளராக ஹாரிஸ் ஜெயராஜ் கமிட்டாகி இருந்தார்.
இந்நிலையில், அவர் இப்படத்தில் இருந்து திடீரென விலகி இருக்கிறார். அவருக்கு பதில், சாம் சி.எஸ் இசையமைக்க உள்ளதாக கூறப்படுகிறது. ஹாரிஸ் ஜெயராஜ் விலகியதற்காக காரணம் என்ன என்பது தெரியவில்லை.
இதேபோல் சாம் சி.எஸ் அண்மையில் ‘புஷ்பா-2’ படத்தில் இருந்து தேவி ஸ்ரீ பிரசாத் விலகியதை அடுத்து அப்படத்திற்கு பின்னணி இசைப் பணிகளை முடித்துக் கொடுத்தார். மேலும் பாலாவின் ‘வணங்கான்’ படத்திலும் பின்னணி இசை அமைத்துள்ளார் என்பது நினைவுகூரத்தக்கது.
