
பார்ட்டியில் மகிழ்ந்த ஐஸ்வர்யா ராஜேஷ்-விஜய் சேதுபதி: ரசிகர்கள் கருத்து..
படத்தின் வெற்றிக் கொண்டாட்டத்தில் ஐஸ்வர்யா ராஜேஷுடன் விஜய் சேதுபதியும் கலந்துகொண்ட நிகழ்வு குறித்துப் பார்க்கலாம்..
தெலுங்கு சினிமாவில் வெங்கடேஷ் நடித்து, அனில் ரவுபுடி இயக்கிய ‘சங்கராந்திகி வஸ்துனம்’ திரைப்படத்தில் ஜோடியானார் ஐஸ்வர்யா ராஜேஷ்.
செம காமெடியான இந்தப் படம் ரூ. 100 கோடி பட்ஜெட்டில் உருவாக்கப்பட்டு, இதுவரை பாக்ஸ் ஆபிஸில் மட்டும் ரூ.300 கோடி வசூலானதாக கூறப்படுகிறது.
இப்படம் மாபெரும் வெற்றிப் படமாக மாறியதால், படக்குழுவினர் மகிழ்ச்சியில் உள்ளனர். அதேநேரத்தில் மிகப்பெரிய பட்ஜெட் படமான ‘கேம் சேஞ்சர்’ எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை.
இந்நிலையில், ரசிகர்கள் கொண்டாடும் ‘சங்கராந்திகி வஸ்துனம்’ படத்தின் வெற்றியை சென்னையில் படக்குழுவினர் கொண்டாடி உள்ளனர்.பார்ட்டியில் நடிகர் விஜய் சேதுபதியும் கலந்துகொண்டார். இதனை ஐஸ்வர்யா ராஜேஷ் தனது இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார்.
இதனைப் பார்த்த ரசிகர்கள், இந்தப் படத்திற்கு தொடர்பே இல்லாத, விஜய் சேதுபதி எப்படி இந்தப் பார்ட்டியில் கலந்து கொண்டார்? என ‘வரலாற்று சிறப்பு மிக்க?’ கேள்வியை கேட்டு வருகின்றனர்.
முன்னதாக, விஜய் சேதுபதி மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் சில படங்களில் இணைந்து பணியாற்றி உள்ளனர். தற்போதும் நெருங்கிய நட்பு உண்டு. இச்சூழலில் ஐஸ் அழைப்பை சேதுபதி எப்படி புறக்கணிப்பார்? எனவும் நெட்டிசன்ஸ் பதில் அளிக்கின்றனர்.
அப்புறம், இந்த இனிய பார்ட்டியில், நடிகை சங்கீதா, வாணி போஜன், நிக்கி கல்ராணி உள்பட பலர் கலந்து மகிழ்ந்துள்ளனர்.