‘விடாமுயற்சி’ படத்தின் 2-வது சிங்கிள் இன்று வெளியீடு: ‘தல’ ரசிகர்கள் உற்சாகம்..

‘விடாமுயற்சி’ பட 2-வது சிங்கிள் இன்று வெளியானது. இது குறித்து இங்கே பார்ப்போம்..
‘தல’ அஜித் நடிப்பில் ‘விடாமுயற்சி’ படத்தின் டிரைய்லர் சமீபத்தில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. இப்படம், பிப்ரவரி 6-ந்தேதி ரிலீஸாகும் எனவும் அறிவிக்கப்பட்டு உள்ளது.
இதற்கிடையே படத்திலிருந்து ‘ஸவதீகா..’ என்ற முதல் சிங்கிள் வெளியானது. அதனை அனிருத்தும், அந்தோணி தாசனும் பாடியிருந்தார்கள். அந்தப் பாடலில் அஜித்தையும், திரிஷாவையும் பார்த்த ரசிகர்கள் இளமை துள்ளலாய் கமெண்ட்ஸ் செய்தனர். முக்கியமாக அஜித்தின் நடனமும் அவரது லுக்கும் செம க்யூட் எனலாம்.
இந்நிலையில், ‘விடாமுயற்சி’ படத்தின் 2-வது சிங்கிளான ‘பத்திக்கிச்சு..’ பாடல் இன்று வெளியாகி இருக்கிறது. இந்தப் பாடலிலும் அனிருத் தனது வழக்கமான இசையை கொடுத்திருக்கிறார். பாடல் வரிகளும் எளிதில் புரியும் வகையில் அமைந்திருக்கின்றன. இப்பாடலை லோகேஷ் கனகராஜின் உதவி இயக்குநரான விஷ்ணு எடவன் எழுத, அனிருத்தும் யோகி சேகரும் இணைந்து பாடியிருக்கிறார்கள்.
‘பத்திக்கிச்சு ஒரு ராட்சச திரி வெடிச்சுதான் இது தீருமே..! பொத்தி வெச்ச அணு ஆயுதம், இனி உலகையே பலி கேட்குமே..! என்று தொடங்கும் அந்தப் பாடலை ‘தல’ ரசிகர்கள் உற்சாகமாய் கொண்டாடி வருகிறார்கள்.
