
பிக் பாஸ் சீசன் 8 டைட்டில் வின்னரான முத்துக்குமரன்.. பரிசுத்தொகை எவ்வளவு தெரியுமா?
பிக் பாஸ் டைட்டிலை வென்ற முத்துக்குமரனின் பரிசுத் தொகை குறித்து பார்க்கலாம்.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளி ஒன்று பிக் பாஸ் ஏழு சீசன் முடிந்து, எட்டாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். ஆளும் புதுசு ஆட்டமும் புதுசு என்ற கோணத்தில் முற்றிலும் புதிய விதமாக இந்த நிகழ்ச்சி ஒளிப்பரப்பானது
இன்று இறுதிக்கட்டத்தை நெருங்கிய நிலையில் கிராண்ட் பினாலே கோலாகலமாக தொடங்கி நடைபெற்றது. இதில் டாப் 5 போட்டியாளர்களாக முத்துக்குமரன்,சௌந்தர்யா, விஷால், ரயான், பவித்ரா தேர்வாகி இருந்தனர்.
இந்த ஐந்து போட்டியாளர்களில் யார் யார் எந்தெந்த இடத்தை பிடித்துள்ளார்கள் என்ற அதிகாரப்பூர்வ அறிவித்து வெளியாகி உள்ளது.
அதன்படி வழக்கம் போல் அனைவரும் எதிர்பார்த்த விதமாக முத்துக்குமரன் முதலிடத்தை பிடித்து டைட்டிலை வென்றுள்ளார்.
ரன்னராக சௌந்தர்யாவும், செகண்ட் ரன்னர் அப்பாக விஷாலும் இடம் பிடித்துள்ளனர். அடுத்து நான்காவதாக பவித்ரா, ஐந்தாவது இடத்தை ரயான் பிடித்து இருந்தார்.
தற்போது டைட்டில் வின்னரான முத்துக்குமரன் டைட்டிலைத் தட்டி தூக்கியது மட்டுமில்லாமல் பரிசுத்தொகையாக 40 லட்சத்து 50 ஆயிரம் பெற்றுள்ளார்.
இதனால் ரசிகர்கள் பலரும் எதிர்பார்த்தது போல் முத்துக்குமரன் வெற்றி பெற்றதை மகிழ்ச்சியாக கொண்டாடி உள்ளனர்.
