அஜித் நடிக்கும் புதிய திரைப்படத்தின் இயக்குனர் யார்?: ரசிகர்கள் பரபரப்பு..

ரொமான்டிக் கதையுடன் திரில்லர் கலந்து கொடுத்து, அதன் மூலம் ஆடியன்ஸ் ஆர்வத்தைத் பரபரக்க வைக்கும் எண்ணத்தில் உருவாக்கப்பட்ட படம், பொங்கல் வெளியீடாய் வந்த ‘நேசிப்பாயா’. ஆகாஷ் முரளி, அதிதி ஷங்கர் ஜோடியாகி நேசித்துள்ளனர். இப்படத்தின் இயக்குநர் விஷ்ணுவரதன். இவர் தற்போது ‘தல’ அஜித்தை சந்தித்த நிகழ்வு வைரலாகி வருகிறது.
அதாவது, ‘குட் பேட் அக்லி’ படத்திற்கு பிறகு அஜித்தை இயக்கப்போவது யார்? என்ற கேள்வி, திரை வட்டாரத்திலும் ரசிகர்கள் மத்தியிலும் இருந்து வருகின்றது.
ஒரு சிலர் சிவா தான் அஜித்தின் AK64 படத்தின் இயக்குனர் என்கின்றனர். ஆனால், ஒரு சிலர் சரண் தான் அஜித்தின் 64 ஆவது படத்தை இயக்குவார் என்றும் சொல்கின்றனர்.
இவ்வாறு ஒருவருக்கொருவர் தங்களின் கருத்துகளை கூறி வரும் நிலையில், அஜித்தை, விஷ்ணு வரதன் சந்தித்துள்ளார்.
முன்னதாக, அஜித்தை வைத்து பில்லா, ஆரம்பம் என இரு வெற்றிப் படங்களை கொடுத்தவர். தற்போது அஜித்தை சந்தித்த நிகழ்வு-எடுக்கப்பட்ட புகைப்படம் இணையத்தில் வெளியாகியுள்ளது. இதைப்பார்த்த ரசிகர்கள் சிலர், விஷ்ணுவரதன் தான் அஜித்தின் அடுத்த பட இயக்குனரோ? எனவும் கேட்டு வருகின்றனர்.
இது சாதாரண சந்திப்பு தானா ? இல்லை, கதை தொடர்பாகவா? என்பது குறித்து இருவரது திருவாயும் எதுவும் மொழியவில்லை. இருப்பினும் இந்த புகைப்படம் இணையத்தில் டிரெண்டாகி வருகின்றது, கடமை உணர்வுமிக்க தீவிர ‘தல’ ரசிகர்களால்.!
