விடுதலை-2 பட முழு வடிவமும் ஓடிடி.யில் காணலாம்: வெற்றிமாறன் தகவல்..

Web Ads

சமூக வேட்கையோடு வெளிவந்திருக்கும் விடுதலை-2 படத்தின் சில காட்சிகள் கட் செய்யப்பட்டது. அந்த காட்சிகள் என்னென்ன என்பது குறித்து பார்க்கலாம்..

வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியாகியுள்ள ’விடுதலை 2’ திரைப்படம் விமர்சனங்களால் வரவேற்கப்பட்டு, வசூலும் அதிகரிக்க தொடங்கியிருக்கிறத

இப்படம் வெளியாவதற்கு முன்னர், ‘படத்தின் 8 நிமிடக் காட்சிகளை குறைத்துள்ளோம். படத்திற்கு கடினமான உழைப்பை செலுத்தியுள்ளோம்’ என பட வெளியீட்டுக்கு முதல் நாள் வெற்றிமாறன் தெரிவித்திருந்தார்.

தற்போது, படம் வெளியாகி விட்டதால் வெற்றிமாறன், ‘விடுதலை’ படத்துக்காக படமாக்கப்பட்ட காட்சிகளின் நீளம் குறித்து பேசியிருக்கிறார். அதில், ‘விடுதலை 2’ திரைப்படம் வடிவில் கூடுதலாக 1 மணி நேரம் இருக்கும். எனவே, படம் ஓடிடியில் கூடுதலாக 1 மணி நேரம் இருக்கும். முதல் பாகத்தில் 11 நிமிடங்கள் கூடுதலாக இருந்தது என நினைக்கிறேன். எவ்வளவு படமாக்க முடியுமோ, அவ்வளவு வைத்துள்ளோம்.

இப்போது முதல் பாகம், திரைப்பட விழா வடிவம் (4 மணி நேரம்), இரண்டாம் பாகத்தின் முதல் பாதி 1:45 மணி நேரம், இரண்டாம் பாதி 1:55 மணி நேரம் என எல்லாத்தையும் சேர்த்தால் 8 மணி நேர படம் இருக்கிறது. அதனை வைத்து 4 பார்ட் பண்ணலாம்’ என தெரிவித்துள்ளார்.

இவ்வகையில், ‘விடுதலை2’ திரைப்படத்தின் முழு வடிவையும் ஓடிடி.யில் கண்டு களிக்கலாம்.

extra 1 hour on ott vetrimaaran information on viduthalai 2
extra 1 hour on ott vetrimaaran information on viduthalai 2