குடித்துவிட்டு கண்ணதாசன் பாட்டுப் பாடி அனைவரையும் ஆட வைத்த முத்து, அண்ணாமலை கொடுத்த ஷாக், இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்

Web Ads

குடித்துவிட்டு கண்ணதாசன் பாட்டை முத்து பாடல் அனைவரும் டான்ஸ் ஆடி உள்ளனர்.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் முத்து குடித்துவிட்டு கண்ணதாசன் பாட்டை பாடுகிறார். அந்த பிசினஸ்மேனும் கண்ணதாசன் ரசிகர் என்பதால் ஜாலியாக பாட்டுப் பாடி ஆட்டம் போடுகின்றனர்.டான்ஸ் ஆடி கொண்டே முத்து வீடியோ எடுக்க ரோகிணியும் வித்தியாவும் அங்கே வந்து போய் முத்துகிட்ட இருந்து நான் வீடியோ எடுக்கிறேன்னு போன வாங்கு என்று அனுப்புகிறார் அவரும் உள்ளே வந்து முத்துவின் போனை வாங்க வேகமாக ரோகினி வீடியோவை தேட கரெக்டா அனுப்பும் நேரத்தில் வந்து போனை புடுங்கி விடுகிறார். இதனால் டென்ஷனாகிறார் ரோகினி. பிறகு அந்த பிசினஸ் மேன் கண்ணதாசன் ரசிகர்கள் பொய் சொல்ல மாட்டார்கள் என்று சொல்ல முத்துவின் முகம் மாறி அமைதியாக உட்கார்ந்து விடுகிறார்.

உடனே அவர் என்னாச்சு முத்து என்று சொல்ல நீங்க சொன்ன வார்த்தை சுருக்குன்னு குத்திடுச்சு சார் என்று சொல்லுகிறார். நான் உங்ககிட்ட பொய் சொல்லிட்டேன் சார். நான் 50 கார் ஓட ஓனர் எல்லாம் கிடையாது ரெண்டு கார் வச்சு ஓட்டிக்கிட்டு இருக்க அதுவும் டீவுல தான் இருக்கு. என் தம்பியும் ரெஸ்டாரன்ட் எல்லாம் வைக்கல அவன் செப்பா ஒரு ஹோட்டலில் வேலை செஞ்சுட்டு இருக்கான். ஆனா அதுக்காக என் அண்ணனுக்கு ஆர்டர் கொடுக்காம விட்டுடாதீங்க முதல்முறையா என்கிட்ட வந்து எனக்கு ஒரு உதவி பண்ணுன்னு கேட்டான் அதனால தான் நான் அப்படி பண்ணிட்டேன் மன்னிச்சிடுங்க சார் என்று முத்து சொல்லுகிறார். உடனே பிசினஸ்மேன் நீங்க ஒரு சூதுவாது தெரியாத ஆளா இருக்கீங்க இந்த காலத்துல இப்படி ஒரு ஆள பார்க்கிறது ரொம்ப கஷ்டம் உங்க அண்ணனுக்கு இல்லாட்டியும் உங்களுக்காக கண்டிப்பா இந்த ஆர்டர் உங்க அண்ணனுக்கு தருவ என்று சொல்லிவிட்டு அவர் கிளம்பி விடுகிறார். உடனே முத்து வெளியே வர மீனா வருகிறார்.

SiragadikkaAasai Serial Today Episode Update
SiragadikkaAasai Serial Today Episode Update

முத்து குடித்திருப்பதை பார்த்து மீனா கோபப்பட்டாலும் உள்ளே நடந்த விஷயங்களை சொல்ல உடன் இப்பதான் கொஞ்சம் மனசுக்கு நிம்மதியா இருக்கு என்று சொல்லுகிறார். பிறகு மூவரும் குடித்துவிட்டு இருப்பதால் அவர்களை வீட்டுக்கு அழைத்து சொல்கின்றனர். லிப்டில் ஏறும்போது முத்துவின் போனை எடுத்து மனோஜின் கோட்டுக்குள் வைத்து விடுகிறார் ரோகிணி. உடனே வித்யா எப்பதான் போன எடுப்பேன் என்று சொல்ல போனால் எடுத்தாச்சு வீட்ல போயிட்டு வீடியோவை அனுப்பி வைக்க வேண்டியது தான் என்று சொல்லுகிறார்.

பிறகு மூவரும் வீட்டுக்கு வர நிற்க கூட முடியாமல் மாறி மாறி பேசிக்கொண்டே வருகின்றனர். மீனா ரோகினி இடம் எங்க அத்தைக்கு போன் பண்ணி வர சொல்றீங்களா என்று சொல்ல இந்நேரம் மாமா தூங்கி இருப்பார் பாத்துக்கலாமா வாங்க என்று மேலே கூட்டி செல்கிறார்கள். ஆனால் கதவைத் தட்ட அண்ணாமலை திறந்த உடன் மூவரும் அதிர்ச்சியாக நிற்கின்றனர். என்ன குடிச்சு இருக்கீங்களா என்று கேட்க ரவி லைட்டா பா என்று சொன்னவுடன் சுருதி புல்லா அங்கிள் என்று சொல்லுகிறார். உடனே விஜயா வர மனோஜ் ஹாப்பி ஆனிவர்சரிமா என்று கட்டிப்பிடிக்க போக முத்து ஆனிவர்சரி உங்களுக்கு டா என்று சொல்ல உடன் விஜயா என்னங்க ஒரு மாதிரி பேசுறா என்று சொல்ல எல்லாரும் குடிச்சிட்டு வந்திருக்கானுங்க என்று அண்ணாமலை சொல்லுகிறார்.

பிறகு என்ன நடந்தது? அண்ணாமலை என்ன செய்தார்? அதற்கு விஜயாவின் பதில் என்ன? என்பதை இன்றைய எபிசோட் பார்த்து தெரிந்து கொள்வோம்.

SiragadikkaAasai Serial Today Episode Update
SiragadikkaAasai Serial Today Episode Update