Web Ads

ஐந்து ஆண்டுகள் கடந்த பிகில் திரைப்படம்.. கொண்டாடும் ரசிகர்கள்..!

பிகில் திரைப்படம் ஐந்து ஆண்டுகளை கடந்துள்ளது

5 years of thalapathy Vijay in bigil movie
5 years of thalapathy Vijay in bigil movie

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது கோட் என்ற திரைப்படம் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய ஹிட் கொடுத்தது.

அதனைத் தொடர்ந்து தளபதி 69 படத்தில் எச் வினோத் இயக்கத்தில் நடித்த வருகிறார். இதுவே விஜய்யின் கடைசி படம் எனவும் தகவல்கள் வெளியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது. அதனைத் தொடர்ந்து அவர் முழு நேர அரசியலில் ஈடுபடுவதாகவும் அறிவித்திருந்தார்.

அவரது நடிப்பில் வெளியாகிய படங்களில் ஒன்று பிகில். இயக்குனர் அட்லி இயக்கத்தில் 2019 ஆம் ஆண்டு வெளியான இந்த திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடித்திருந்தார்.

இந்தப் படம் வெளியாகி இன்றோடு ஐந்து ஆண்டுகளை கடந்த நிலையில் அதனை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். குறிப்பாக இந்த படம் 295 கோடி வசூல் செய்ததாகவும் சொல்லப்படுகிறது. இந்த தகவல் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

5 years of thalapathy Vijay in bigil movie
5 years of thalapathy Vijay in bigil movie