அடம் பிடிக்கும் இனியா, பாக்கியா கொடுத்த ஷாக், இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்

இனியா அடம் பிடிக்க,பாக்யா அதிர்ச்சி கொடுத்துள்ளார்.

தமிழ் சின்னத்திரைகள் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் கோபி வாக்கிங் வர செழியனை சந்திக்கிறார். அவரிடம் ஜாபுக்காக பார்க்கில் போய் உட்கார்ந்துக்கிட்டே இருக்காத நேரா கிச்சனுக்கு வந்துரு, சொல்ல அவரும் சரி என சம்மதிக்கிறார். பிறகு உன்கிட்ட ஒரு விஷயம் சொல்லணும் செழியா என்று சொல்ல என்ன என்று கேட்க நான் செந்திலோடா பெஸ்ட் பிரண்ட் பிசினஸ்மேன சந்தித்தேன் ஆனா அவரை இப்ப சென்னைல வந்து ஒரு தேவைக்காக வந்து இருக்காரு அது என்னன்னு தெரியுமா அவர் ஒரு படத்தை புரொடியூஸ் பண்ண போறாரா அது உடனே நம்ம ஹீரோ ஞாபகம் தான் எனக்கு வந்தது உடனே எழில பத்தி அவர்கிட்ட சொன்ன சரி கதையை சொல்ல சொல்லுங்க நல்லா இருந்தா பண்ணலாம் என்று சொல்லி இருக்காரு இந்த காடை எழில் கிட்ட நான் கொடுத்தேன்னு சொல்லாம கொடுத்தது என்று சொல்லி செழியன் இடம் கொடுக்கிறார். பிறகு ஏன் நீங்க சொன்னதா சொல்லக்கூடாது என்று சொல்ல அவனை பத்தி தான் உனக்கு தெரியாதா? அவன் அதை பண்ண மாட்டான் என்று சொல்லிவிட்டு சரி நம்ப அவங்க பிரண்டு ஒருத்தன் இருக்கான் அவன் மூலமா நம்ம கொடுத்துடலாம் என்று பிளான் பண்ணுகின்றனர்.

பிறகு இனியா பாக்யாவை அழைத்துக் கொண்டு காலேஜுக்கு வர இனியாவின் மேம் வருகிறார். இனிய இந்த டான்ஸ் காம்படிஷன்ல கலந்துகிறது எவ்வளவு பெரிய விஷயம். எங்க காலேஜுக்கு பெருமை ஆனால் நீங்க டான்ஸ் மாஸ்டர் இல்லாம ப்ராக்டிஸ் பண்ண சொன்னா அவளாலே எப்படி வின் பண்ண முடியும் எனக்கு தெரிஞ்ச யுவராஜ் மாஸ்டர் இருக்காரு நீங்க அவர் கிட்ட போயிட்டு ஜாயின் பண்ணிக்கோங்க அதிகமா காச கேட்க மாட்டாங்க நான் சொல்லிக்கிறேன் என்று சொன்னவுடன் அந்த இடத்திற்கு பாக்யாவும் இனியாவும் வருகின்றனர்.

Baakiyalakshmi Serial Today Episode Update
Baakiyalakshmi Serial Today Episode Update

உள்ளே யுவராஜ் மாஸ்டரை சந்தித்து இருவரும் பேச பாக்யா ஃபீஸ் எவ்வளவு ஆகும் என்று கேட்கிறார். மத்த பசங்க மந்த்லி கொடுப்பாங்க ஆனா இவங்க டான்ஸ் காம்பெட்டிஷன்ல இருக்கறதுனால ஒரு பாட்டுக்கு 15 ஆயிரம் கட்டணும் என்று சொல்லுகிறார். ஆனா இதுவே ரொம்ப கம்மி எல்லாரும் 20000, முப்பதாயிரம் வாங்குவாங்க ஆனா நான் உங்களுக்கு பாதி காசு தான் கேட்டு இருக்கேன் என்று சொல்லிவிட்டு வெளியே ஃபார்ம் கொடுப்பாங்க நீங்க ஃபில்லப் பண்ணி கொடுத்துட்டீங்கன்னா இன்னைக்கு டான்ஸ் ஆரம்பிச்சுடலாம் என்று சொல்லுகிறார். ஆனா பாக்கியா வீட்ல கேட்டுட்டு சொல்றேன் என சொல்லிவிட்டு அங்கிருந்து கிளம்பி வர வரும் வழியில் எல்லாம் நீயா ஏமா வந்த சொல்லு சொல்லு என்று கேட்கிறார்.

வீட்ல போய் பேசிக்கலாம் வா என்று சொல்ல எல்லாம் முடிவு நீதானே எடுப்ப எதுக்கு வீட்ல போய் பேசிக்கலாம்னு கூப்பிடுற என்று கேட்க இப்ப இருக்கிற பிரச்சனைக்கு என்னால 15000 கட்ட முடியாது. உனக்கு அடுத்த செமஸ்டர் வந்த அந்த பீசையே நான் எப்படி கட்ட போறேன் தெரியல இந்த நேரத்துல வந்து என்கிட்ட 15000 கேட்டால் நான் என்ன பண்ண முடியும். வரப்போற செலவு நெனச்சி எனக்கு பைத்தியமே பிடிக்குது என்று பாக்யா சொல்ல இனிய என்னை சேர்த்து விட்டு ஆகணும் என்று ரோட்டில் நின்று அடம் பிடிக்கிறார். உடனே வெளியே நின்னு டிராமா பண்ணிட்டு இருக்காத வீட்டுக்குவா என்று இனியாவை அழைத்து செல்கிறார்.

கோபி ராதிகாவுடம் காரில் உட்கார்ந்து கொண்டிருக்க அந்த நேரம் பார்த்து பாக்யா இனியாவை இழுத்து செல்வதை பார்த்து கோபி என்னாச்சு என்று நான் கேட்கப் போகிறேன் என்று சொல்ல இப்போ உடனே போய் ஆகணும்னு கிடையாது நீங்க அப்புறமா பேசிக்கோங்க என்று சொல்ல நான் போன் பண்ணி பேசுறேன் என்று சொல்லுகிறார்.

ரெஸ்டாரண்டுக்கு வந்த பாக்கியா பிரச்சினைகளை எப்படி சமாளிக்க போகிறார்? என்பதை இன்றைய எபிசோட் பார்த்து தெரிந்து கொள்வோம்.

Baakiyalakshmi Serial Today Episode Update
Baakiyalakshmi Serial Today Episode Update