
5th Super league : 5-வது இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டி தொடங்கி சிறப்பாக நடைபெற்று வருகிறது.
இந்த தொடரில் நேற்றய ஆட்டம் புனேவில் கேரளா மற்றும் எப்.சி.புனே சிட்டி அணிகளுக்கு இடையே நடைபெற்றது.
ஆட்டம் தொடக்கம் முதலே நன்றாக விறு விறுப்பாக இருந்தது. ஆட்டதின் முதல் கணக்கை புனே அணியே தொடங்கியது.
புனே அணி வீரர் மார்கோ முதல் கோல் அடித்து கணக்கை தொடங்கியது.
இதை அடுத்து முதல் பாதியில் புனே அணி ஒரு புள்ளிகளுடனும் கேரளா அணி புள்ளிகள் எதுவும் எடுக்காமலும் இருந்தது.
இதேபோல் ஆட்டத்தின் இரண்டாவது பாதியில், கேரளா அணி கோல் அடித்தது.
இதனால் புனே மற்றும் கேரளா தலா 1 புள்ளிகள் எடுத்த நிலையில் ஆட்டத்தின் இறுதி வரை வேறு கோல் அடிக்கவில்லை.இதனால் ஆட்டம் 1-1 என்ற கணக்கில் சமனில் முடிந்தது.