பிக் பாஸ் நிகழ்ச்சியில் அஸூமை தொடர்ந்து இன்னொரு போட்டியாளரை வைல்ட் கார்ட் என்ட்ரியில் உள்ளே அனுப்ப இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
4th WildCard Entry in BB4 : தமிழ் சின்னத்திரையில் உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் நிகழ்ச்சி பிக் பாஸ். இந்நிகழ்ச்சியின் நான்காவது சீசன் தற்போது ஒளிபரப்பாகி வருகிறது.
இதுவரை 50 நாட்கள் முடிவடைந்துள்ள நிலையில் விஜய் டிவி சீரியல் நடிகர் அஸூம் உள்ளே செல்ல இருப்பதாக கூறப்பட்டு வருகிறது.
அவரைத் தொடர்ந்து அடுத்ததாக சில நாட்களில் நடிகர் சுரேஷ் சக்ரவர்த்தி மீண்டும் பிக் பாஸ் வீட்டிற்குள் அனுப்பப்பட உள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
இவரும் பேட்டி ஒன்றில் மீண்டும் பிக் பாஸ் வீட்டிற்குள் செல்லும் வாய்ப்பு கிடைத்தால் செல்வேன் என்று கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஏற்கனவே அர்ச்சனா, சுச்சி என இருவர் வைல்ட் கார்ட் என்ட்ரியாக அனுப்பப்பட்டனர். மூன்றாவதாக அஸூம் செல்ல நான்காவதாக சுரேஷ் சக்ரவர்த்தி செல்கிறார்.
இதனால் நெட்டிசன்கள் போற போக்கை பார்த்தால் பிக் பாஸ் 150 நாள் ஆகிடும் போல என கமெண்ட் அடித்து வருகின்றனர்.