தளபதி விஜய் அவர்களின் அரபி க் குத்து பாடல் 250 மில்லியன் கணக்கான பார்வையாளர்களை கடந்துள்ளதாக சன் பிக்சர்ஸ் நிறுவனம் பதிவு ஒன்றே வெளியிட்டுள்ளது.

தமிழ் திரை உலகில் இளைய தளபதியாக திகழ்ந்து கொண்டிருக்கும் நடிகர் விஜய் அவர்கள் தற்போது வம்சி படைப்பள்ளி இயக்கிக் கொண்டிருக்கும் ‘வாரிசு’ திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். தமிழ்,தெலுங்கு என இரண்டு மொழிகளில் உருவாகிக்கொண்டிருக்கும் இப்படம் வரும் பொங்கலுக்கு வெளியாகும் என்று கூறப்படுகிறது.

250 மில்லியன் பார்வையாளர்களைக் கடந்துள்ள 'அரபிக் குத்து' பாடல்!… சன் பிக்சர்ஸ் வெளியிட்ட பதிவால் கொண்டாட்டத்தில் ரசிகர்கள்.

இந்நிலையில் விஜய் நடிப்பில் கடந்த ஆண்டு நெல்சன் திலிப் குமாரின் இயக்கத்தில் வெளியான ‘பீஸ்ட்’ திரைப்படம் ரசிகர்களிடம் கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தாலும் அனிருத் இசையில் உருவான இப்படத்தின் அனைத்து பாடல்களும் ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.

250 மில்லியன் பார்வையாளர்களைக் கடந்துள்ள 'அரபிக் குத்து' பாடல்!… சன் பிக்சர்ஸ் வெளியிட்ட பதிவால் கொண்டாட்டத்தில் ரசிகர்கள்.

அதிலும் “அரபிக் குத்து” பாடல் பட்டி தொட்டி எங்கும் பரவி அனைவரையும் ஆட்டம் போட வைத்துள்ளது என்றே சொல்லலாம். இந்நிலையில் இந்தப் பாடலின் வீடியோ யூடியூபில் 250 மில்லியன் (25 கோடி) பார்வையாளர்களை கடந்துள்ளதாக இப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளது. இதனால் ரசிகர்கள் மிகுந்த கொண்டாட்டத்தில் உள்ளனர்.