2 Point O

2 Point O : 2 பாயிண்ட் ஓ படத்தின் ட்ரைலர் ரிலீஸ் தேதி குறித்த தகவல் இணையத்தில் வெளியாகியுள்ளது.

லைகா ப்ரொடக்ஷன் நிறுவனத்தின் தயாரிப்பில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள படம் 2 பாயிண்ட் ஓ.

பிரம்மாண்ட இயக்குனரான ஷங்கர் இந்த படத்தை அதிகமான பட்ஜெட்டில் உருவாக்கியுள்ளார். படத்தில் ரஜினிக்கு வில்லனாக அக்ஷய் குமார் நடித்துள்ளார். நாயகியாக எமி ஜாக்சன் நடித்துள்ளார்.

சமீபத்தில் இந்த படத்தின் டீசர் இணையத்தில் வெளியாகி பிரம்மாண்ட சாதனை படைத்து இருந்தது. இதனையடுத்து ரசிகர்கள் அனைவரும் படத்தின் ட்ரைலருக்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

மேலும் படத்தின் டிரைலரும் தீபாவளி விருந்தாக வெளியாகலாம் என கூறப்பட்டு வந்த நிலையில் தற்போது அதற்கு முன்பாகவே வெளியாக வாய்ப்பு இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.

அதாவது இந்த படத்தின் ட்ரைலர் வரும் நவம்பர் 3-ம் தேதி வெளியாக இருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளது.

சர்காருடன் நவம்பர் 6-ம் தேதி வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டிருந்த நிலையில் தற்போது 3-ம் தேதியே வெளியாகும் என தகவல் கிடைத்துள்ளது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.