
Serial Actress : பிரபல சீரியல் நடிகைக்கு இளைஞர் ஒருவர் படுக்கைக்கு அழைத்துள்ளார். அதுவும் 1 மணி நேரத்திற்கு ரூ 2 லட்சம் தருகிறேன் என கூறி அழைப்பு விடுத்துள்ளார்.
மலையாள சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் காயத்ரி அருண். தொடர்ந்து பல சீரியல் தொடர்களில் நடித்து வருகிறார்.
தற்போதைய காலத்தில் சின்னத்திரை முதல் வெள்ளி திரை வரை உள்ள நடிகைகள் பலரும் பாலியல் தொல்லையால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
நடிகை காயத்ரி அருணிற்கும் தற்போது இளைஞர் ஒருவர் முகநூல் மூலமாக பாலியல் ரீதியாக ஆபாசமாக பேசியுள்ளார்.
ஒரு நாள் இரவு என்னுடன் வந்து தங்குங்கள், 1 மணி நேரத்திற்கு ரூ 2 லட்சம் ருபாய் தருகிறேன் என கூறியுள்ளார்.
அதற்கு அந்த நடிகை உன்னுடைய சகோதரிகள், தாயார் ஆகியோர் பாதுகாப்பாக இருக்க இறைவனிடம் வேண்டி கொள்கிறேன் என கூறியுள்ளார்.
அதுமட்டுமில்லாமல் அந்த நபர் அனுப்பிய மெசேஜை ஸ்கிரீன் ஷாட் எடுத்து இணையத்தில் வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.