1st Day Collection of Karnan

தமிழ் படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு என்பது குறித்து தகவல் தெரியவந்துள்ளது.

1st Day Collection of Karnan : தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் தனுஷ். இவரது நடிப்பில் இறுதியாக வெளியான திரைப்படம் கர்ணன். பரியேறும் பெருமாள் படம் புகழ் மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியான இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.

தற்போது இந்த படத்தின் முதல் நாள் வசூல் என்ன என்பதைப் பார்க்கலாம் வாங்க. வடசென்னை திரைப்படம் முதல் நாளில் இருந்து 80 லட்சம் வசூல் செய்திருந்தது. கர்ணன் திரைப்படம் அதனை பின்னுக்குத் தள்ளி சாதனை படைத்துள்ளது.

ஆம், முதல் நாளில் கர்ணன் திரைப்படம் ரூபாய் 92 லட்சம் வசூல் செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தனுஷின் திரைப்பயணத்தில் வடசென்னை மிகப்பெரிய மைல் கல்லாக இருக்கும் என கூறப்படுகிறது.

சென்னையில் மட்டும் இப்படம் ரூபாய் 11 லட்சம் வசூல் செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.