
18 MLA Verdict : 18 எம்எல்ஏக்களின் தகுதி நீக்கம் செல்லும் என நீதிபதி எம்.சந்திரனாரயணன் அதிரடியாக தீர்ப்பு வழங்கினார். இதனை பலரும் ஆதரித்து வருகின்றனர். மேலும், தகுதி நீக்கம் சட்டவிரோதம் இல்லை என்று கூறி 18எம்எல்ஏக்களின் மனுவை தள்ளுபடி செய்தார்.
இதற்கு சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம், ” ஜெயலலிதாவின் ஆட்சிக்கு வெற்றி!! துரோகிகளுக்கு சரியான பாடம் புகட்டபட்டுள்ளது என கருத்து தெரிவித்தார்.
மேலும், 18எம்எல்ஏக்களின் தகுதி நீக்கம் செல்லும் என்ற தீர்ப்புக்கு, முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்குக் அமைச்சர்கள் நேரில் சென்று வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
அதிமுக தலைமை அலுவலகத்தில் முதலமைச்சர் பழனிசாமி மற்றும் துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் ஒருவருக்கொருவர் வாழ்த்து தெரிவித்து கொண்டனர்.
முதலமைச்சர் பழனிசாமி, துணை முதலமைச்சர் பன்னீர்செல்வத்திற்கு அமைச்சர்கள் மற்றும் நிர்வாகிகள் வாழ்த்து.