Ponniyin Selvan
பொன்னியின் செல்வன் படத்தில் இருந்து அமலா பாலை மணிரத்தினம் நீக்கி விட்டதாக தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவில் மல்டி ஸ்டார் படங்களை இயக்குவதில் தனித்துவமான திறமை கொண்ட இயக்குனர் என பெயரெடுத்தவர் இயக்குனர் மணிரத்தினம்.

இவர் தற்போது பொன்னியின் செல்வன் படத்தை இயக்க திட்டமிட்டு வருகிறார். பல முன்னணி நட்சத்திரங்கள் நடிக்க ஒப்பந்தமாகியுள்ள இந்த படத்தில் நடிகை அமலாபாலும் நடிக்க இருந்தார்.

ஆனால் அவருடைய தற்போதைய உடல் தோற்றம் பொன்னியின் செல்வனுக்கு செட்டாகாது என்பதால் படத்தில் இருந்து அமலாபாலை மணிரத்தினம் நீக்கி இருப்பதாக தகவல் ஒன்று கிடைத்துள்ளது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.