Top 6 Profit Movies 2019
2019-ல் இதுவரை வெளியான படங்களில் அதிக லாபம் கொடுத்த 6 படங்களின் லிஸ்ட் தற்போது வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவில் ஒவ்வொரு வருடமும் பல படங்கள் ரிலீசாகின்றன, ரிலீசாகும் அத்தனை படங்களும் தயாரிப்பாளர்களுக்கு லாபத்தை கொடுத்து விடுகிறதா என்றால் நிச்சயம் இல்லை என்பது தான் பதில்.

அவ்வளவு ஏன் முன்னணி நடிகர்கள், மெகா ஸ்டார்களின் எல்லா படங்களும் லாபம் கொடுத்து விடுமா? என்றால் அதுவும் கேள்வி குறி தான்.

இதுவரை இந்த 2019-ம் ஆண்டில் வெளியான படங்களில் நல்ல லாபம் கொடுத்த 6 படங்கள் லிஸ்ட் கோலிவுட் சினிமா வட்டாரங்களில் வலம் வர தொடங்கியுள்ளது.

இதில் தல அஜித்தின் விஸ்வாசம் திரைப்படம் முதலிடத்தை பிடித்துள்ளது. பிகில், பேட்ட போன்ற திரைப்படங்கள் அதிகமான பட்ஜெட், அதிகமான தொகைக்கு விற்பனை செய்யப்பட்ட காரணங்களால் அதிக லாபம் கொடுத்த படங்களின் லிஸ்டில் இடம் பிடிக்க தவறியுள்ளதாக கூறப்படுகிறது.

இதோ அந்த 6 படங்களின் லிஸ்ட்

  1. விஸ்வாசம்
  2. தடம்
  3. கோமாளி
  4. LKG
  5. அசுரன்
  6. கைதி