modi
இந்திய பிரதமர் நரேந்திர மோடி இன்று சென்னை வந்துள்ள நிலையில் சமூக வலைத்தளங்களில் ஒன்றான டிவிட்டரில் #Gobackmodi ஹேஷ்டேக் டிரெண்டிங்கில் இருக்கிறது.

Gobackmodi hashtag trending in twitter – பணமதிப்பிழப்பு, ஜி.எஸ்டி உள்ளிட்ட மோடி தலைமையிலான பாஜக அரசின் பல அதிரடி முடிவுகளால் தமிழகத்தில் பாஜகவிற்கு கடும் எதிர்ப்பு காணப்படுகிறது.

இதைத்தொடந்து கடந்த சில வருடங்களாகவே பிரதமர் மோடி தமிழகம் வரும் போதும் அவருக்கு திமுக, மதிமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

மேலும், சமூகவலைத்தளங்களில் நெட்டிசன்கள் பலரும் #Gobackmodi என்கிற ஹேஷ்டேக்கை பயன்படுத்தி எதிர்ப்பு தெரிவிக்க ஓவ்வொரு முறையும் மோடி சென்னை வரும்போது இந்த ஹேஷ்டேக் டிரெண்டிங்கில் இருப்பது வழக்கமான ஒன்றாக மாறிவிட்டது.

நமது தோஷங்களை விலக்கும் பரிகாரத் தலங்களை பற்றி தெரிந்து கொள்வோமா?

இந்நிலையில், சென்னை ஐஐடி-யின் 56வது பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்ள இன்று காலை 9 மணியளவில் மோடி விமானம் வழியாக சென்னை வந்தார்.

இதைத் தொடர்ந்து நெட்டிசன்கள் இன்று காலை முதலே #Gobackmodi ஹேஷ்டேக்கை பயன்படுத்தி டிவிட்டுகள் போட தற்போது இந்த ஹேஷ்டேக் டிரெண்டிங்கில் இருக்கிறது.

இது மோடி ஆதரவாளர்களுக்கு அதிர்ச்சியையும், கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here